#RajaChorusQuiz 35 பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நினைவில்

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ஐந்தாண்டு நினைவில் அவரும் இசைஞானி இளையராஜாவும் இணைந்த ஒரு பாடல்.

அம்மன் கோயில் கொண்டாட்டக் களத்திலே கூட்டுக்குரல்கள் குலவை ஓசைக்கு வந்தமைகின்றார்கள்.

அம்மன் பாட்டுக்கே உரிய துள்ளலும், இடையே மெது நடையுமாகப் பயணிக்கும்.

T.S.ராகவேந்தர், சண்முகசுந்தரி, பெரிய கருப்பத்தேவர் என்ற மூத்த பாடகர்களோடு பவதாரணியும் சேர்ந்த பாட்டு இது.

இரண்டு நாயகர்கள் வித்தியாசமான தோற்றத்தில் நடித்த படமிது. இந்தப் பாடல் அதிகம் போய்ச் சேராவிட்டாலும் இன்னும் கொண்டாட வேண்டிய பாட்டு என்பதால் இந்தப் போட்டி வழியாக ஒரு வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.

கொடி ஏத்தி வைப்போம் – பிதாமகன்

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 34 மன்மதராசா மன்மதராசா

எஸ்.பி.பாலசுப்ரமணியம் தோழியருடன் பாடும் கோரஸ் பாட்டு இன்று.

ஒரு மன்மத நாயகனுக்கு காதல் ரசப் பாட்டு அதிலும் அந்த எஸ்பிபி குரலில் பழம் பெரும் பாடகராக மிளிர்ந்திருப்பார். பதிலோடு வராவிட்டால் குற்றம் குற்றமே.

தீராத விளையாட்டுப் பிள்ளை – நெற்றிக்கண்

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 33 பாடகி மின்மினி பிறந்த நாளில்

இன்று பின்னணிப் பாடகி மின்மினி பிறந்த நாளில் அவர் பாடிய சிறப்புப் பாடலோடு ஒரு புதிர்.

இணைந்து பாடுபவர் மனோ மற்றும் குழுவினர்.

புலவர் புலமைப்பித்தன் வரிகளில் வரும் இந்தப் பாட்டு ஒரு உறவு முறையைத் தலைப்பில் கொண்ட படத்தில் இருந்து.

 மலையோரம் மாங்குருவி மாவிலையில் – எங்க தம்பி

Posted in Uncategorized | 52 Comments

#RajaChorusQuiz 32 நாயனம் பாடுது

கங்கை அமரன் வரிகளில் ஒரு குடும்பத்தனமான பாட்டு.

இந்தப் பாடலில் இடம் பெறும் கோரஸ் பகுதியைப் பாட்டின் அழகியலில் தன் அப்பன், ஆத்தாவுக்குச் சுட்டிப் பையன் வேடிக்கையாகத் திருமணம் செய்வது போலக் காட்சியமைப்பில் பொருத்திக் காட்டியிருப்பார் இயக்குநர் மனோபாலா.

எஸ்.ஜானகியோடு சேர்ந்து பாடும் மென் குரல் ஆண் பாடகர் மைனர்த்தனமான நாயகனுக்கான குரலாக.

மனசுக்குள்ள நாயனச்சத்தம் – மல்லு வேட்டி மைனர்

Posted in Uncategorized | 50 Comments

#RajaChorusQuiz 31 எங்க ஊரு மாட்டுக்காரன்

பாடலைப் பாடியவரே படத்தின் நாயகனாகவும் திரையில் அபிநயித்திருப்பதால் பாடகர் பற்றிய உப துணுக்குத் தேவையாக இருக்காது தானே? கவிஞர் வாலி எழுதிய பாட்டு.

கோழிக் கூட்டத்துக்கும், வாத்துக் கூட்டத்துக்கும் கூட கோரஸா அட ராமா ராமா 🙂

சொன்னப்படி கேளு – சிங்கார வேலன்

Posted in Uncategorized | 45 Comments