#RajaMusicQuiz புத்தம் புதிய போட்டி வரும் மார்ச் 1, 2023 முதல்
திரையிசையில் ஆயிரம் படங்களைத் தாண்டிச் சாதனை படைக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு இதுவரை
#RajaDuetQuiz 200 போட்டிகள்
#RajaSoloQuiz 200 போட்டிகள்
#RajaChorusQuiz 500 போட்டிகள்
இவற்றைத் தொடர்ந்து #RajaMusicQuiz இடம்பெறவிருக்கிறது.
இந்தப் புதிய போட்டியின் அமைப்பு இதுதான்
ஒரு பாடலின் முக்கிய பாடகர் அல்லது தனிக்குரல் ஒன்றின் ஆலாபனை இசைத்துணுக்கு வழங்கப்படும்.
உதாரணத்துக்கு இதயம் ஒரு கோவில் பாடலின் ஆரம்ப ஆலாபனை, அல்லது நிலாவே வா பாடலின் ஆரம்ப ஆலாபனை.
ஏற்கனவே வேறு போட்டியில் வந்த பாடலும் வரும்.
போட்டி விதிமுறை
அனைத்துப் பாடல்களும் தமிழில் வெளிவந்த, அல்லது தமிழில் மொழி மாற்றிய பாடல்களாகவே இருக்கும்.
உங்கள் பதிலை குறித்த கேள்வி கேட்கப்படும் http://rajaquiz.kanapraba.com/
தளத்தின் போட்டிப் பக்கத்தில் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு போட்டியிலும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் பாடல்களின் முதல் இரு சொற்களையும் தமிழில் தட்டச்சிப் பகிர வேண்டும்.
பாடலுக்கான பதிலைத் திருத்துபவருக்குப் புள்ளி இல்லை.
முதல் மூன்று பேர் அன்றித் தொடர்ந்து பதில் தருபவர்கள் பாடல்களின் முதல் இரண்டு சொற்களையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சிய தமிழ் வடிவிலோ தரலாம்.
புதிருக்கான பதிலை குறித்த போட்டி பகிர்ந்த பதிவின் comment box இல் மட்டும் இடவும்.
ட்விட்டரிலோ, பேஸ்புக்கிலோ, வாட்சாப்பிலோ பகிராதீர்.
தனி ஐடி உருவாக்கி ஒரே ஐடியை உபயோகிக்கவும்.
தவறான பதில்கள் அடுத்த நாள் அழிக்கப்படும்
இந்தப் போட்டி தினமும் இந்திய நேரம் மாலை 4 மணிக்கு இடம்பெறும். முதல் நாள் போட்டி முடிவு அடுத்த நாள் இந்திய நேரம் நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும்.
ராஜா இசைப் புதிர் ஒவ்வொரு 100 போட்டிகளும் தனிச் சுற்றுகளாகக் கணிக்கப்படும். முதல் சுற்றுகளில் பரிசு பெற்றோருக்கு அடுத்த சுற்றுகளில் பரிசு இல்லாமல் அடுத்த கட்டத்தில் இருப்போருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.