இந்தப் படம் ஶ்ரீதேவி நடித்ததல்ல ராதிகா நடித்தது. கண்ணதாசன் வரிகள்.
பாடலைப் பாடுகிறார் கே.ஜே.ஜேசுதாஸ்.
இந்தப் படம் ஶ்ரீதேவி நடித்ததல்ல ராதிகா நடித்தது. கண்ணதாசன் வரிகள்.
பாடலைப் பாடுகிறார் கே.ஜே.ஜேசுதாஸ்.
இன்றைய நாள் பாடகி சுஜாதா பிறந்த நாளில் வண்ணக் கலவையாக ஒரு பாடல்.
பாடலை எழுதியவர் பழநி பாரதி அவர்கள்.
இந்த நேரத்துக்கு நீங்கள் பாடலைக் கண்டு பிடித்து நேர காலத்தோடு கொடுத்திருப்பீர்கள் தானே?
டைம் இல்லை என்று சொல்லாதீர்கள் ப்ளீஸ்.
நிறம் பிரித்துப் பார்த்தேன் – டைம்
இன்று வெறும் எட்டே விநாடிகள் ஒலிக்கும் இந்த இசைத் துணுக்கு ஒரு பாடலின் சரணத்தில் 5 இடங்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த ஆலாபனையின் தொகுப்பாகப் பகிர்கிறேன்.
இந்தப் படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட படமாகும். எஸ்.பி.சைலஜா & குழுவினருடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடலின் தமிழ் வடிவம் வைரமுத்துவின் கைவண்ணம். முத்தான பாடல்கள் கொண்ட படம்.
எஸ்பிபியின் தந்தை ஒரு கதாகாலட்சேபம் செய்தவர், மகனும் ஒரு பாடலில் இவ்விதம் கதாகாலட்சேபம் செய்யும் பேறு தான் என் சொல்வது.
ராமன் கதை கேளுங்கள் – சிப்பிக்குள் முத்து
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் ஆலாபனையில் அமைந்த அழகிய பாடல் இது.
அன்போடு படத்தைத் தேடினால் பூ மாதிரிப் பதில் கிட்டும்.
அலை மீது தடுமாறுதே – அன்புள்ள மலரே
இன்று மறைந்த புல்லாங்குழல் வாத்திய விற்பன்னர் சுதாகர் அவர்களது மறைவில் அவருக்குப் பிரியாவிடை கொடுக்கும் பாடலாக இன்றைய புதிர் அமைகின்றது.
அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
சுதாகர் அவர்களின் குழலிசையோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடும் இந்தப் பாடலின் வரிகள் கவிஞர் வாலி. கீரவாணி ராகத்தில் அமைந்த அதியற்புதமான பாடல். மோகனின் படங்களில் ஒன்று.
மலையோரம் வீசும் காத்து – பாடு நிலாவே