Monthly Archives: January 2022

#RajaChorusQuiz 181 ராசாத்தி ரோசாப்பூ

கவியரசு கண்ணதாசன் வரிகளோடு இன்றைய பாடல். துள்ளிசையோடு அழகாகப் பொருந்தும் கோரஸ் குரல்கள். இளையராஜா, ஜென்ஸியின் வழக்கத்துக்கு மாறான துள்ளல் பாட்டு. ஶ்ரீதேவி நடித்த படம். தோட்டம் கொண்ட ராசாவே – பகலில் ஒரு இரவு

Posted in Uncategorized | 47 Comments

#RajaChorusQuiz 180 ஓம் சாந்தி

பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் ஒரு பறவையை ஞாபகமூட்டும் மூன்றெழுத்துப் படம். பாடலை மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குழுவினரோடு பாடுகிறார்கள். தேடும் தெய்வம் நேரில் வந்தது — கழுகு

Posted in Uncategorized | 46 Comments

#RajaChorusQuiz 179 பூமகளே வா

இன்றைய புதிரில் ஒரு அழகான காதல் பாட்டு. மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். பிரபு நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் அவருடைய நண்பர். கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் பதில் வரும். சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ – காவலுக்கு கெட்டிக்காரன்

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 178 பூவேந்தன் வேண்டும்

நா.முத்துகுமார் அவர்கள் இளையராஜாவோடு சேர்ந்த இன்னொரு திரைப்படம். கலைஞர் கருணாநிதியின் கதை திரைப்பட வடிவம் கொண்டிருக்கின்றது. பாடலை ஷ்ரேயா கோசல், தர்ஷனா குழுவினர் பாடுகிறார்கள். மலர் வில்லிலே அம்பொன்று விட்டானே – பொன்னர் ஷங்கர்

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 177 காலமெனும் தேரே

சத்யராஜ் மாறுபட்ட வேடத்தில் நடித்த திரைப்படம். இங்கே தரும் சித்ரா குரலில் ஒலிக்கும் பாடலின் ஆரம்ப வரிகளையே குறிப்பிட வேண்டும். கவிஞர் வாலி பாடலை எழுதியிருக்கிறார். நாளை விடிந்தால் பதிலோடு வந்துடுங்க. காலம் இளவேனிற்காலம் – விடிஞ்சா கல்யாணம்

Posted in Uncategorized | 42 Comments