Monthly Archives: February 2022

#RajaChorusQuiz 209 செக்கச் சிவந்த வானம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் அழகிய பாடலிது. இந்தப் பாட்டு வந்து 40 வருடங்கள் ஆனால் எத்தனை பிறை கண்டாலும் மறக்க முடியாதது. கவிஞர் வைரமுத்துவின் வரிகள். வானெங்கும் தங்க விண்மீன்கள் – மூன்றாம் பிறை

Posted in Uncategorized | 47 Comments

#RajaChorusQuiz 208 மனசெல்லாம் மத்தாப்பு

கே.ஜே.ஜேசுதாஸ் குழுவினருடன் பாடும் பாடல் இன்றைய போட்டிப் புதிராக. கங்கை அமரனின் கை வண்ணம். இந்தப் படத்தில் முதிர் தோற்றத்தில் நாயகனும் & ராதிகா இணையாகவும் நடிக்க இளம் ஜோடிகளும் இருப்பார்கள். ஆனால் பிரபு நடித்த படமல்ல. மாப்பிள்ள நல்ல புள்ள// அடி கானக்கருங்குயிலே கச்சேரி – பூந்தோட்டக் காவல்காரன்

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 207 ஒரே முறை உன் தரிசனம்

எஸ்.ஜானகி குழுவினர் பாடும் ஒரு இசைப் பெருவெள்ளம் இது. வில்லன் நாயகன் இயக்குநராகிய போது அமைந்த படம். தேவலோகத்துத் தலைப்பு. ஒரு நாள் அந்த ஒரு நாள் – தேவதை

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 206 கோடி அபிநயம்

கவிஞர் வாலி அவர்களின் கை வண்ணத்தில் இன்றைய பாடல். கூட்டுக் குரல்களோடு கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி கானமிசைக்கின்றார்கள். இதுக்கெல்லாம் விழித்திருந்து பதில் தேட வேண்டுமோ? தூங்காத விழிகள் ரெண்டு – அக்னி நட்சத்திரம்

Posted in Uncategorized | 50 Comments

#RajaChorusQuiz 205 வசந்த அழைப்பு

ஸ்வர்ணலதா, குழுவினர் பாடும் பாடல் வசந்தமான தலைப்புக் கொண்ட படத்தில் இருந்து வருகின்றது. இந்தப் படத்தின் நாயகன், நாயகி பரிச்சயமில்லாத முகங்கள். பாடலோடு வருக. போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா – வா வா வசந்தமே

Posted in Uncategorized | 30 Comments