Monthly Archives: August 2021

#RajaChorusQuiz 52 யுவன் பிறந்த நாளில்

முக்கிய அறிவிப்பு : இந்தப் போட்டி நாளை செப்டெம்பர் 1 ஆம் திகதி நடைபெற மாட்டாது. நண்பர்களே ! இன்றைய போட்டி ஒரு குதூகலத் துள்ளிசையாக பிறந்த நாள் கொண்டாடும் யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஜேசுதாஸ், செளமியா, ட்ரம்ஸ் முருகனுடன் குழுவினர் பாடும் கொண்டாட்டப் பாட்டு. இதுக்கெல்லாம் க்ளு வேணுமா ல்தகா சைஆ ஆவா … Continue reading

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 51 கிருஷ்ண லீலை

இன்று வெறும் 3 செக்கன்களே ஓடக் கூடிய கோரஸ் இசைத் துணுக்கோடு போட்டி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம், படத்தின் தலைப்பு கூட அவரின் முந்திய படமொன்றின் பாடலாக இருக்கும். இந்த ஜோடிப் பாடலை T.M.செளந்தரராஜன் மற்றும் P.சுசீலாவோடு குழுவினர் பாடுகிறார்கள். கோரஸ் குரல்கள் போடும் இதே ஒலியில் அடுத்த சரணத்தில் வரிகளாகப் … Continue reading

Posted in Uncategorized | 31 Comments

#RajaChorusQuiz 50 விஜய்காந்த் வாரம் – இனிக்கும் இளமை

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வாரத்தின் நிறைவுப் பாடலாக அருமையானதொரு தாம்பத்ய சங்கீதம். கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி இணைந்து பாடும் இந்தப் பாடலின் ஆரம்பக் கட்டு, இடையிசை இரண்டு என்று கோரஸ் குரல்கள் விரவியிருக்கும் பகுதிகளைக் கோத்துப் பகிர்கின்றேன். அவை மணப்பெண்ணின் தோழிமார் போன்று அழகியல் பறையும் குரல்களாகப் பதிந்திருக்கின்றன. குங்குமம் மஞ்சளுக்கு – எங்க முதலாளி

Posted in Uncategorized | 52 Comments

#RajaChorusQuiz 49 விஜய்காந்த் வாரம் – அமுத கானம்

இன்றைய கோரஸ் போட்டிப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலைக் கேட்கும் போது சுபவேளை (கொண்டவீட்டி தொங்கா) பாடலின் நினைப்பும் கூட வரும். கங்கை அமரன் வரிகள். யார் ஆசைப்பட்டார்களோ தெரியவில்லை கங்கை அமரனுக்குத் தர்மம் செய்திருப்பார்கள், ஆமாம் படத்தில் இதே பாடலை கங்கை அமரனும், சித்ராவும் பாடும் ஒலி வடிவமே உண்டு. … Continue reading

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 48 விஜயகாந்த் வாரம் – எனக்கு நானே நீதிபதி

ஜெயசந்திரன், சித்ராவோடு தோன்றும் கூட்டுக்குரல்கள் இந்தக் காதல் பாடலின் நோகாத நடன அசைவுகளுக்கான குரல்களாகத் திகழும் இனிமை. இந்தப் பாடலின் சரணத்துக்கு முந்திய இசையில் தன் ஜோடியோடு அந்த நளினமான நடன அசைவுகள் கொடுப்பாரே கேப்டன் ஆகா. கவிஞர் மு.மேத்தா எழுதிய பாடல். பதிலைத் தப்பாகச் சொன்னால் கரண்டு கம்பத்துல கட்டித் தோல உரிச்சுடுவேன் ஆம்மா. … Continue reading

Posted in Uncategorized | 41 Comments