போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Balaji+Sankara+Saravanan+V on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- Murali.S on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- ப்ரியா சாரநாதன் on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- ராஜா on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- Anonymous on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
பெட்டகம்
Monthly Archives: July 2021
#RajaChorusQuiz 21 கோடியில் நீ ஒருவன்
புரட்சிக் கலைஞர் எங்கள் கேப்டனுக்காகக் கிடைத்த அற்புதமான காதல் ஜோடிப் பாடலோடு இன்றைய புதிர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர் இணைந்து பாடும் இந்தப் பாட்டைக் கேட்டாலேயே உற்சாக வெள்ளம் பெருக்கெடுக்கும். அப்படியொரு பாட்டு. பாடலின் ஆரம்பத்தில் தமக்கென்றொரு தனித்துவமான குதூகலத் துள்ளலோடு பாடலை ஜோடிக்குக் கையளிக்கும் கோரஸ் குழு அப்படியே பாட்டிலும் இழைந்து அழகுபடுத்தியிருக்கிறார்கள். கங்கை … Continue reading
Posted in Uncategorized
45 Comments
#RajaChorusQuiz 20 வள்ளி தேடிப் போனா
கங்கை அமரன் இயக்கிய ஒரு படத்தில் இருந்து அட்டகாஷ் கிராமியப் பாடல் ஒன்று. மலேசியா வாசுதேவனும், சித்ராவும் குழுவினருடன் பாடும் இந்தப் பாடல் கிராமியப் பாடல்களில் மலேசியா வாசுதேவனின் தனித்துவத்தைக் காட்டும் இன்னொன்று. கம்மாக்கரைப் பக்கம் போய் பாடலைத் தாங்கய்யா என்று கேட்காமல் தேடிப் பிடித்து பாடலோடு வருக கூடலூரு குண்டுமல்லி – கும்பக்கரை தங்கய்யா
Posted in Uncategorized
44 Comments
#RajaChorusQuiz 19 சொல் பேச்சுக் கேளடா
ஒரு நடிகரின் குரலில் அவரின் பெருமையை அவரே பாடுவது எப்பேர்ப்பட்ட புதுமை. அதில் வெற்றி கண்டிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். பாடல் வரிகள் வாலியார் வேறு சொல்லவா வேண்டும்? இந்தப் பாடலின் தொடக்கத்திலும், இடையிலும் வரும் துள்ளிசைக் குரல்களை இணைத்து தருகிறேன். பாடகரின் எண்ணவோட்டத்தை ஆமோதிப்பது போலத் துள்ளிக் குதிக்கிறார்கள் பாருங்கள். சூராதிசூரர்களே கோட்டை விடாமல் பாடலோடு … Continue reading
Posted in Uncategorized
36 Comments
#RajaChorusQuiz 18 ஆடிக் காற்றில் ஆடுது தீபம்
கவிஞர் முத்துலிங்கம் அவர்களது வரிகளில் ஒரு பாட்டு. இங்கே படத்தில் உமா ரமணனுக்கும், இளையராஜாவுக்குமாகத் தனித்தனி. போட்டியில் பகிர்வது இளையராஜா பாடும் தனிப்பாட்டின் இடையிசை. இளையராஜாவின் தனிப் பாடல் பட்டியலில் முதல் பத்துக்குள் வரக்கூடிய அற்புதம் நிறைந்த பாட்டு. ஆறும் அது ஆழம் இல்ல – முதல் வசந்தம்
Posted in Uncategorized
58 Comments
#RajaChorusQuiz 17 சின்னக்குயில் சித்ராவின் பிறந்த நாள் கொண்டாட்டம்
இன்று பின்னணிப் பாடகி சித்ரா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு எடுத்து வைத்திருக்கும் கூட்டுக் குரல் ஒரு தேமதுரம். கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடன் சித்ரா இணைந்து பாடிய பாடல்கள் தனி அழகு அதிலும் இந்தப் பாட்டைக் கேட்டால் உங்கள் மனசே உங்களிடம் இராது. இந்தப் பாடல் ஒரு கிராமியப் பாடல் என்ற அந்தஸ்தைப் பெற்று நிற்பதால் கோரஸ் … Continue reading
Posted in Uncategorized
53 Comments