#RajaChorusQuiz 30 பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் நினைவில்

இன்று பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் அவர்களது நினைவு நாளில் அவருடைய வரிகள் பூத்த ஒரு பாடல்.

இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் மற்றும் பி.சுசீலா குழுவினருடன் பாடுகின்றார்கள்.

மாறு வேடம் போட்டு ஆடுகின்ற கிராமத்தான் பாட்டு. ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கிய படம் வேறு. கூட நடித்தவர் இரண்டெழுத்து நாயகி. துள்ளிசைப் பாட்டுக்கு வலுச்சேர்க்கும் கோரஸ் குரல்கள்.

கோடானுகோடி கொண்ட செல்வனைப் பாடுங்க – முரட்டுக்காளை

Posted in Uncategorized | 29 Comments

#RajaChorusQuiz 29 பூக்கள் வெண்பாக்கள் பாடாதோ

சின்னக் குயில் சித்ரா கூட இணைந்து குமரிக் கூட்டத்தோடு பாடும் பாட்டு.

பாடல் வரிகள் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள்.

பூவான இந்தப் படத் தலைப்பில் ஜேசுதாஸின் இன்னொரு படப் பாடல் ஒன்றும் தொடங்கும்.

வண்ணப் பூங்காவனம் சின்ன பிருந்தாவனம்- ஈரமான ரோஜாவே

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 28 மேகம் போகும் தூது

கவிஞர் வாலியார் வரிகளில் ஒரு இனிய காதல் பாட்டு இன்றைய நாளில்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாடும் இந்த இன்னிசைப் பாடலின் தாளக் கட்டு மிகக் கடினமான வழுக்குப் பாறை. இளையராஜா தொடக்கி வைக்க பின்னணிக் குரல்கள் கையப்படுத்தி ஆலாபனை வழங்கி அப்படியே பாடக ஜோடிகளிடம் கொடுக்கும் அற்புத ஆலாபனை.

ப வரிசைப் படங்களை எடுத்த மலையாளப் பட இயக்குநரின் இன்னொரு படம்.

கரையோர காற்று – பகலில் பவுர்ணமி

Posted in Uncategorized | 36 Comments

#RajaChorusQuiz 27 துள்ளியதோ சொல்லியதோ

திருப்புகழ் மாதிரித் தெறிக்கும் வரிக் கட்டமைப்போடு கங்கை அமரன் எழுதிய பாட்டு.

இரட்டைப் பாடகிகளோடு சேர்ந்திசைக் குரல்கள் இணைந்த பாட்டு ஆனால் காட்சியமைப்பில் ஒரே நாயகி & நாயகனுக்கான காதல் பின்னணிக்காக வந்திருக்கிறது.

இந்தப் பாட்டுக்கெல்லாம் புதிய க்ளூ கொடுக்கணுமா என்ன?

சரியான பாடல் ஆரம்ப வரிகள் வரும் வரை யோசித்துப் பதில் கொடுக்கவும்.

தம்தன நம்தன தாளம் வரும் – புதிய வார்ப்புகள்

Posted in Uncategorized | 47 Comments

#RajaChorusQuiz 26 வேலை கிடைச்சிடுச்சு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாட்டு இன்றைய புதிரில். பாடல் வரிகள் பிறைசூடன்.

காதலுக்கெல்லாம் வேலை தேடி வருவது திரையிசையில் தான் உண்டு. கூடவே வந்த தோழிமாரையும் கோரஸ் பாட வைக்கிறார் இந்தக் காதலி.

சும்மா முறைக்காமப் பாடலோடு வருக.

வேறு வேலை உனக்கு இல்லையே – மாப்பிள்ளை

Posted in Uncategorized | 44 Comments