இன்றைய பாடல் மனோ, குழுவினருடன் பாடும் ஒரு கோஷ்டி கானம். இந்தப் படத்தில் மற்ற எல்லாப்பாடல்களும் போட்டி போட்டிக் கொண்டு ஹிட்டடித்தவை. அதனாலோ என்னவோ மற்றைய பாடல்கள் அளவுக்கு அறியப்ப்படாத பாடல்.
ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் போது பாடலின் மெட்டமைத்த விதமும் கோரஸ் குரல்களைச் சிறப்பாகக் கையாண்ட வகையிலும் நேசிக்க வைக்கும்.
கவிஞர் வாலி எழுதிய பாட்டு.
கார்த்திக் நடித்த படங்களில் ராஜா நம்ம ஏரியா என்று சொல்லுமாற்போல இசையமைப்பார். அப்படி ஒன்று இது.
ஃபோக்குன்னா ஃபோக்குத்தான் ப்ரேக்குன்னா ப்ரேக்குத்தான் – இது நம்ம பூமி