இன்றைய பாடலை எஸ்.ஜானகியோடு அருண்மொழி, குழுவினர் பாடுகிறார்கள்.
பாடல் வரிகள் கங்கை அமரன். ஒரு இயக்கு நர் இன்னொரு இயக்குநர் படத்தில் நடித்திருக்கிறார். தாலாட்ட வைக்கும் பாடல்கள் அவ்வளவு தான்.
வெண்ணிலவுக்கு வானத்தப் பிடிக்கலையா – தாலாட்டு பாடவா
இன்றைய பாடலை எஸ்.ஜானகியோடு அருண்மொழி, குழுவினர் பாடுகிறார்கள்.
பாடல் வரிகள் கங்கை அமரன். ஒரு இயக்கு நர் இன்னொரு இயக்குநர் படத்தில் நடித்திருக்கிறார். தாலாட்ட வைக்கும் பாடல்கள் அவ்வளவு தான்.
வெண்ணிலவுக்கு வானத்தப் பிடிக்கலையா – தாலாட்டு பாடவா
இன்று புலவர் புலமைப்பித்தன் விண்ணுலகம் எட்டியதன் நினைவில் வானம்பாடியாக அவர் கொட்டித் தந்த ஏராளம் ரசிக உள்ளங்களை நாடிச் சாதனை படைத்த திரையிசைப் பாடல்களில் ஒன்று இடம்பெறுகின்றது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி குழுவினர் பாடுகின்றார்கள். இதற்குமேல் என்ன வேண்டும் இந்த எண்பதுகளின் காவிப்பாட்டைச் சொல்ல?
ஓ வானம்பாடி ! உனை நாடி – சாதனை
சாஸ்திரிய சங்கீத தளத்தில் அமைந்திருக்கும் இன்றைய பாடலில் கோரஸ் குரல்களும் அதன் பாங்கில் சந்தமிசைக்கும் அழகான காதல் பாட்டு.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு இரண்டு முன்னணிப் பாடகியர் பாடியிருக்கிறார்கள்.
புலவர் புலமைப்பித்தனின் அற்புதமானதொரு திரையிசை இலக்கியம் இந்தப் பாட்டு.
இந்தப் படத்தின் பாடல்களை இசையமைத்தவர்களில் இசைஞானி இளையராஜாவும் ஒருவர் 😉
நானொரு பொன்னோவியம் கண்டேன் – கண்ணில் தெரியும் கதைகள்
எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் கோரஸ் குரல்களோடு இணைந்து பாடும் பாட்டு.
இந்தப் படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றியது. தெலுங்கில் முழு நீளத் தலைப்பு தமிழில் சுருங்கிக் கொண்டது.
தேவலோகம் எல்லாம் தேட வேண்டியதில்லை, தெலுங்கு தேசத்தின் பிரபல மொழி மாற்றில் இந்தப் படத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் கண்டிப்பாக இருக்கும்.
மறக்குமா செழும் மலரைக் காற்று மறக்குமா – காதல் தேவதை
இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாளில் அவரின் கவி வரிகளோடு ஒரு பாட்டு.
பாடலை எஸ்.ஜானகி குழுவினரோடு பாடுகின்றார்.
நடிகை ரேவதி நடித்த, ஒரு வாத்தியக் கருவியின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட படம்.
யெம்மாடி இங்கே கூட்டுக் குரல்கள் ஆலாபனைக்கு அல்ல, பாட்டுப் பாடப் பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒரு பூவனக்குயில் மாமரத்துல – மரகத வீணை