பாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது நினைவு நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளை அவ் இறவாப் பாடகரை நினைவு கூரும் வாரமாக இன்றைய நாள் முதல் வரும் சனிக்கிழமை வரை அவரது பாடல்களோடு போட்டி இடம்பெறுகின்றது.
முதலில் இடம்பெறுவது எஸ்பிபி அவர்களது துள்ளிசைக் குரலோடு கோரஸ் கூட்டமும் இணைந்து போட்டும் கொட்டம். இந்தப் படத்தில் இரண்டு துள்ளிசைப் பாடல்களும் உச்சம் கொண்டவை. கமல்ஹாசனுக்கான அளவான குரல் இங்கே மேடைப் பாட்டுக்கும் கை கொடுக்குமாற் போல இருக்கும்.
பாடலை எழுதியவர் வைரமுத்து. உங்களுக்குள் இருப்பவரைத் தட்டி எழுப்புங்கள் எங்கே எந்தன் பாடல் என்று.
எங்கே எந்தன் காதலி – எனக்குள் ஒருவன்