கங்கை அமரன் பாடல் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடும் பாட்டு.
கங்கை அமரனின் ராசியான நாயகன் நடித்த படம் ஆனால் கங்கை அமரன் இயக்கவில்லை.
ஆம்பளைகளே ஜாக்கிரதை :)) பாடலோடு வருக.
கற்புடைய ஆம்பளங்க ஊருக்குள்ளே – தங்கமான ராசா
கங்கை அமரன் பாடல் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடும் பாட்டு.
கங்கை அமரனின் ராசியான நாயகன் நடித்த படம் ஆனால் கங்கை அமரன் இயக்கவில்லை.
ஆம்பளைகளே ஜாக்கிரதை :)) பாடலோடு வருக.
கற்புடைய ஆம்பளங்க ஊருக்குள்ளே – தங்கமான ராசா
கவிஞர் வாலி வரிகளில் பி.சுசீலா அவர்கள் குழுவினரோடு இணைந்து பாடும் ஒரு அழகிய பாட்டோடு.
இந்தப் பாடலின் தொகையறா அல்லது பல்லவியைச் சொன்னால் ஏற்கப்படும்.
எத்தனை வருஷம் ஆனாலும் மறக்கக் கூடிய பாட்டா இது?
பூ பூக்கும் மாசம் தை மாசம் ( பொங்கல பொங்கல வைக்க ) – வருஷம் 16
பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் கோவை முரளி குழுவினர் பாடும் ஒரு வித்தியாசமான பாட்டு. ஜோதிடம் சொல்லிப் பாடும் வரிகள்.
இந்தப் படம் சுஜாதாவின் நாவலொன்றில் இருந்து எடுக்கப்பட்டது, ரஜினிகாந்தின் பஞ்ச் வசனம் தான் படத் தலைப்பு. ஆனால் ரஜினி நடிக்கவில்லை.
கை ரேகை பார்த்து – இது எப்படி இருக்கு
இன்றைய பாடல் எஸ்.ஜானகியும் கூட்டுக் குயில்களுமாகக் கொண்டாடும் பாட்டு. இங்கே பகிரும் இசைத் துணுக்கிலேயே பாடலையும் அவர்கள் முணுமுணுத்து விடுகிறார்கள். இந்தப் பாடலின் ஆரம்பத்திலும் முடிவிலும் இந்த மாதிரியானதொரு ஓட்டம் இருப்பது வெகு சிறப்பு.
அத்தோடு படத்தின் எழுத்தோட்ட இசையிலும் இந்தக் கோரஸ் இசைக் குரல்களின் இதே ஆலாபனை பயன்பட்டிருக்கிறது.
கவிஞர் முத்துலிங்கம் கொடுத்த அட்டகாஷ் பாட்டு. கே.பாக்யராஜ் பரம்பரையில் வந்த இயக்குநர் நடித்த படம், இயக்கம் இன்னொருத்தர். பல்லாண்டுகளுக்குப் பின் தன் வெற்றித் தயாரிப்பாளரோடு இளையராஜா கூட்டுச் சேர்ந்த படமிது.
ஓ ஹோ ஹோ காலைக் குயில்களே – உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவுகளைத் தாங்கிப் பயணிக்கும் இவ்வாரத்தின் நிறைவுப் பாடல். ஒரு பாடகனின் உள்ளக் கிடக்கையாகவே பயணித்துப் போகின்றது. ஒலிப்பதிவுக் கூடத்தில் கூட்டுச் சேரும் கோரஸ் குரல்கள் நம் மனதின் அசரீரியாக இருந்தால் இப்படி இருக்குமோ?
முக்கிய குறிப்பு : நாளை ராஜா கோரஸ் புதிர் இடம்பெறாது.
கேளடி கண்மணி – புது
புது அர்த்தங்கள்