#RajaChorusQuiz 74 எஸ்பிபி வாரம் – பாடல் ஆறு

பாட்டுத் தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது நினைவு வாரத்தில் இன்று நடிகர் பிரபுவுக்காக அவர் கொடுத்த பாடலொன்றோடு.

பாடல் வரிகள் கங்கை அமரன்.

இந்தப் படத்தில் இரண்டு ஆங்கில வரி ஆரம்பப் பாடல்கள் உள்ளன. எனவே சரியானதோடு வருக. இன்றைய போட்டியில் நீங்கள் ஆங்கிலத்தில் கொடுத்தாலும் முதல்வராக வாய்ப்பு உண்டு.

Hey you you come to me (மலரும் மொட்டுக்கள் ) – ஆனந்த்

Posted in Uncategorized | 50 Comments

#RajaChorusQuiz 73 எஸ்பிபி வாரம் – பாடல் ஐந்து

பாடும் நிலா பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவு தாங்கும் வாரத்தில் இன்று கார்த்திக்குக்காக அவர் பாடிய பாடலொன்று.

இது இசைஞானி இளையராஜாவின் பட வரிசையிலும் முக்கியமானதொரு படம்.

கவிஞர் வைரமுத்து எழுதிய பாட்டு. எஸ்பிபியின் பாட்டின் பெயரிலேயே படப் பெயரும் உண்டு எனவே ஓடி வா(ருங்கள்).

தேவதை இளம் தேவி – ஆயிரம் நிலவே வா

Posted in Uncategorized | 48 Comments

#RajaChorusQuiz 72 எஸ்பிபி வாரம் – பாடல் நான்கு

பாடும் நிலா எஸ்பிபி நினைவு வாரத்தில் இன்று ஒலிக்கும் பாடல், அவர் பாடலால் உயிரூட்டிய இன்னொரு நாயகன் மோகன் படத்தில் இருந்து.

இந்தப் பாடலை எஸ்பிபி குழுவினர் பாட, வரிகளை வாலி கவனித்திருக்கின்றார்.

இளமைத் துள்ளலோடு ஒரு பாட்டு, ஓடி வருக அதைக் கேட்டு.

துள்ளும் இளமை இது – அன்பே ஓடி வா

Posted in Uncategorized | 36 Comments

#RajaChorusQuiz 71 எஸ்பிபி வாரம் – பாடல் மூன்று

பாட்டுத் தலைவன் எஸ்பிபி அவர்கள் நாயகக் குரலாக இயங்கிய வகையில் இன்று சத்யராஜ் அவர்களுக்குக் கொடுத்த அதியற்புதமான பாடலொன்று.

கவிஞர் வாலி அவர்கள் அளவான, அலட்டிக் கொள்ளாத அதே சமயம் காட்சிச் சூழலுக்கேற்ப பொருத்திய வரிகள்.

மனப் போராட்டத்தின் பிரதிபலிப்பாய் எழும் கோரஸ் குரல்கள் படத்தில் பழைய நினைவுகளை அகழ்ந்து பிடிக்கும் தூண்டிலாக.

இந்தப் பாட்டுக்கெல்லாம் படைக்கவே வேண்டியதில்லை, இருப்பதை எடுத்துக் கொடுக்கலாமே.

எங்கிருந்தோ இளங்குயிலின் – பிரம்மா

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 70 எஸ்பிபி வாரம் – பாட்டு இரண்டு

பாட்டுத் தலைவன் நினைவுத் தொடர் வாரத்தில் நேற்று கமல் வந்தார் இன்று ரஜினி வந்திருக்கின்றார்.

பாடல் வரிகள் வாலி.

இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு கலக்கலான அரசியல் சாட்டையடித் துள்ளிசைப் பாட்டு ஆனால் ஏனோ அதிகம் பிரபலமாகவில்லை. இளையராஜா யூடியூப் அதிகாரத் தளத்தில் கூட இல்லை என்றால் பாருங்களேன்.

தாரை தப்பட்டை முழங்க இந்தப் பாட்டைக் கண்டு பிடித்தால் உங்க காட்டில் மழை.

தம்பட்டம் தாரை எடுங்க – தனிக்காட்டு ராஜா

Posted in Uncategorized | 25 Comments