புலவர் புலமைப்பித்தன் அவர்களது வரிகளில் ஒரு தோழிமார் பாட்டு.
இந்தப் பாடலைக் கூடுக் குரல்களோடு பாடியிருப்பவர் ஒரு பிரபலத்தின் மனைவி. அவர்களுக்கும் இந்தப் படத்துக்கும் இன்னும் நெருங்கிய சம்பந்தம் கூட உண்டு.
குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா – வள்ளி
புலவர் புலமைப்பித்தன் அவர்களது வரிகளில் ஒரு தோழிமார் பாட்டு.
இந்தப் பாடலைக் கூடுக் குரல்களோடு பாடியிருப்பவர் ஒரு பிரபலத்தின் மனைவி. அவர்களுக்கும் இந்தப் படத்துக்கும் இன்னும் நெருங்கிய சம்பந்தம் கூட உண்டு.
குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா – வள்ளி
இன்று வரும் பாடல் எஸ்.ஜானகி குழுவினர் பாடும் துள்ளிசை ஒன்று.
கங்கை அமரன் பாடல் வரிகள்.
இந்தப் பாடலின் சிறப்பே கோரஸ் குரல்களை ஆரம்பத்தில் புதுமையாகக் கையாண்டு பின்னர் பாடல் ஓட்டத்தில் மேற்கத்தேய இசையிலிருந்து அப்படியே இந்துஸ்தானி ரக இசைக்குத் தொட்டுவிட்டு நிதானமாக மேலெழும் விமானம் போல மீண்டும் மேற்கத்தேய இசையில் பறக்கும்.
படத்தை இயக்கியவருக்கு அறிமுகப் படம் என்பதோடு இவரைத் திரையுலகமே திரும்பிப்பார்க்க வைக்கும் அளவுக்கு வெற்றிப்படம்.
இளமைக்கு என்ன விலை – புலன் விசாரணை
எமது ராஜா இசைப் புதிர்ப் போட்டிகளில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகப் பங்கெடுத்த அன்புச் சகோதரி மலர்ச்செல்வி சபாபதி (Malar Saba) அவர்கள் அகால மரணமடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைகின்றோம்.
அவரின் நினைவுகளோடு இந்த வாரம் ராஜா புதிர்ப் போட்டி ஓய்வு நிலைக்குச் செல்கின்றது.
வரும் அக்டோபர் 18 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படும்.
இசைஞானி இளையராஜா குழுவினருடன் பாடும் பாட்டு. அதிகம் போய்ச் சேர்ந்திருக்க வேண்டியதொன்று. புதுப் புது முகங்களோடு புறப்பட்ட பாரதிராஜா படமிது.
பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி – புது நெல்லு புது நாத்து
கவிஞர் வாலி அவர்களது வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா குழுவினரோடு பாடும் பாட்டு.
கமல்ஹாசன் நடித்த படம்.
பாடலோடு வருக.
விழியில் என் விழியில் – ராம் லட்சுமணன்