எமது ராஜா இசைப் புதிர்ப் போட்டிகளில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகப் பங்கெடுத்த அன்புச் சகோதரி மலர்ச்செல்வி சபாபதி (Malar Saba) அவர்கள் அகால மரணமடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைகின்றோம்.
அவரின் நினைவுகளோடு இந்த வாரம் ராஜா புதிர்ப் போட்டி ஓய்வு நிலைக்குச் செல்கின்றது.
வரும் அக்டோபர் 18 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படும்.
ஆழந்த இரங்கல்,
எதிர்பாராதது..ஆழ்ந்த இரங்கல்கள்..திரு.சபாபதி மனம் தேறட்டும்..
அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்…
இந்த பெரும்தொற்று காலத்தில் நடைப்பெற்ற புதிர் போட்டிகளின் மூலம் அறிமுகமானவர் மலர்செல்வி அவர்கள். 12 மணி நேரத்திற்கும் மேலாக பதில் தரலாம் என்ற நிலையில் அன்றே விடை சரியா என்று அறிய முந்தி பதில் அளிப்பவர்களில் ஒருவர். எத்தனை படங்கள், பாட்டுக்கள், அதற்கான clue, நாயக நாயகியர், பாடகர்கள், பாடகியர்கள் பற்றிய விவரம் கமெண்ட்களின் மூலம் அனைவருடன் நன்கு பழகியவர்.
அவரின் அகால மரணம் பற்றிய செய்தி அதிர்ச்சியை தந்து ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் தத்தளிக்க வைக்கிறது.
அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் 🙁
RIP 🙏 Malarselvi
ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா முக்தியடையட்டும்.