#RajaChorusQuiz 101 நேசம் கொண்ட ராசாத்தி

ராஜா கோரஸ் புதிர் வெற்றிகரமான இரண்டாவது ஆட்டத்துக்கு வரவேற்கிறேன்.

இந்தப் போட்டி தினமும் இந்திய நேரம் மாலை 4 மணி முதல் அடுத்த நாள் நண்பகல் 12 மணி வரை இடம்பெறும்.

இன்றைய போட்டி கலக்கலான கிராமியத் தெம்மாங்கு கட்டி வருகின்றது.

குலவைச்சத்தம் கேட்டு வளர்ந்த ராஜாவுக்கு கோரஸ் குரல்களைப் புதுசு புதுசாக உருவாக்க அது முன்னோடியாக அமைந்திருக்கும். இன்றைய பாட்டு காதலர்களுக்கு ஒரு களியாட்டத் திருவிழாவில் ஓர் இசைப்பொங்கல்.

மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள்.

மதுர மரிக்கொழுந்து வாசம் – எங்க ஊரு பாட்டுக்காரன்

Posted in Uncategorized | 64 Comments

#RajaChorusQuiz 100 நூறாவது வெற்றி நாள்

வெற்றிகரமான நூறாவது போட்டியின் வழியே ராஜாவின் கோரஸ் குரல்கள் உங்களைச் சந்திக்கின்றன. இதுவரை நாளும் தொடந்து பங்கேற்ற அன்பர்களுக்கு நன்றிகள். போட்டியில் முதல் 13 அல்ல முக்கியம் தொடர்ந்து சரியான பதில்களைக் கொடுப்பதே.

கோரஸ் குரல்கள் அடுத்த சுற்றுப் போட்டி நவம்பர் 1 முதல் ஆரம்பமாகும்.

இன்றைய போட்டியின் பாடல்.

இளையராஜாவும் எஸ்.ஜானகியும் சேர்ந்து பாடலின் ஆரம்பத்தில் இருந்து, இடையிசை பின்னர் முடிவிடம் என்று ஒரு நீண்ட கோரஸ் பயணத்தில் கலந்து களிப்பூட்டுகிறார்கள்.
குரலிசையை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு விதவிதமாகப் பணியாரம் செய்யலாம் என்பதை ராஜாவும், எஸ்.ஜானகியும் தம் குரல்களால் பாடமெடுக்கிறார்கள். சேர்ந்து பாடும் கோரஸ் குரல்களும் சளைத்தவர்களா என்ன?
40 வருடங்களுக்கு முன்னர் கொடுத்த அந்தப் பாடலில் தான் புத்துணர்வூட்டும் அத்துணை இசை ஜாலம். பாடலில் வரும் மூன்று இசைப்பாகங்களையும் முடிச்சுப் போட்டுக் கொடுத்திருக்கிறேன். முடிச்சு இருந்தாலும் நெருடல் இருக்கிறதா என்று கேட்குமளவுக்கு சீரான இசைக் கோர்வை அது.

பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் – கழுகு

Posted in Uncategorized | 54 Comments

#RajaChorusQuiz 99 பூப்பூவாப் பூத்திருக்கு

100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் கோரஸ் புதிர்ப் போட்டியில் ஒரு கொண்டாட்டப் பாட்டு.

கவிஞர் வாலி எழுதிய பாட்டு. சித்ரா, மனோ குழுவினரோடு பழம் பெரும் நடிகை மற்றும் பாடகியும் இணைகிறார்.

செம்பருத்திப்பூவு சித்திரத்தப் போல – செம்பருத்தி

Posted in Uncategorized | 47 Comments

#RajaChorusQuiz 98 பாடகர் மனோ பிறந்த நாளில்

பாடகர் கூட்டம் அணி செய்ய ஒரு கலக்கலான பின்னணிக் குரல் ஆபாலனையோடு பாடகர் மனோவுக்கான பிறந்த நாள் சிறப்புப் பாட்டுப் புதிர் இன்று.

சிம்பொனித் தரம் மிளிரும் இசையின் உச்சத்தை அனுபவத்துக் கொண்டே ஊர் ஊராகப் பாடலைத் தேடாமல் ஒரு இடத்தில் மட்டும் நின்று யோசித்துப் பதிலைத் தட்டி விடுங்கள்.

வந்தாள் வந்தாள் ராஜகுமாரி-ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 97 வண்ணக்கிளி நெஞ்சத்திலே

மனோ & எஸ்.ஜானகி குழுவினர் பாடும் அழகிய காதல் பாட்டு.

பாடல் வரிகள் கங்கை அமரன். மணிவண்ணன் & சத்யராஜ் இணைந்த வெற்றிச் சித்திரம் இது.

காதல் கிளியே காதல் கிளியே – ஜல்லிக்கட்டு

Posted in Uncategorized | 38 Comments