இன்றைய போட்டி நாளை இந்திய நேரம் மதியம் 12 மணி வரை தொடர்கின்றது.
இன்று போட்டிப் பாடலாக வரும் இந்தப் பாட்டுக்கு வயசு 30. தீபாவளித் தினத்தில் வந்த படங்களில் இதுவுமொன்று.
குலவைச் சத்தத்தோடு கிராமிய மணங் கமிழும் இந்தப் பாட்டுக்கும் கவியெழுதிய வாலி தான் இதே தினம் தளபதியில் வந்த நவீனத்துக்கும், குணாவில் வந்த காவியத்துக்குமாக இசைக்கு வரி கொடுத்தவர்.
குழந்தை பாக்கியக் கிட்டும் பூரிப்பில் சாமியை வேண்டிக் கொண்டாடும் இந்தப் பாட்டைக் கேட்டாலேயே தலைப்பும் தானாக வந்து தாலாட்டுமே?
கூட்டுக் குரல்கள் இணைய, எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் அந்தக் குரலிலேயே அப்பப்பா அப்பனின் பூரிப்பு மழை கொட்டுது.
இன்று சிறப்புச் சேர்ப்பது குழந்தையை நோக்கிப் பாடும் ஒரு அழகான பாடல். ஷ்ரேயா கோசல், நரேஷ் ஐயர் குழுவினரோடு பாடும் அட்டகாஷ் இன்னிசை விருந்து.
கிரிக்கெட் வீரரை நினைத்தால் விளாசி அடிக்கும் பந்து போல படம் பேரும் வந்துடும் அப்புறம் எதுக்கு நீங்க கப்பலிலோ கட்டுமரத்திலோ இல்ல தோணியிலோ போய் விடையைத் தேடணும்கிறேன்.