படத்தின் இயக்குநரே பாட்டெழுதிய படம் இது. கார்த்திக் நடித்த படம்.
மனோ, லேகாவுடன் ஒரு பாடகர் கூட்டம் கோரஸ் இசைத்துப் பாடும் பாட்டு.
என்ன வரம் வேண்டும்- நந்தவனத் தேரு
படத்தின் இயக்குநரே பாட்டெழுதிய படம் இது. கார்த்திக் நடித்த படம்.
மனோ, லேகாவுடன் ஒரு பாடகர் கூட்டம் கோரஸ் இசைத்துப் பாடும் பாட்டு.
என்ன வரம் வேண்டும்- நந்தவனத் தேரு
கவிஞர் பிறைசூடனின் வரிகளோடமைந்த ஒரு தோழிமார் பாடல்.
எச்.ஜானகி குழுவினருடன் பாடுகின்றார்.
நடிகர் சரவணன் படங்களில் ஒன்று.
மானுக்கும் மீனுக்கும் – பார்வதி என்னை பாரடி
பாடலாசிரியர் கங்கை அமரன் வரிகளில் இன்றைய போட்டிப் பாட்டு.
இசைஞானி இளையராஜாவுடன் கோரஸ் குரல்களும் சேர்ந்து கொட்டமடிக்கும் பாட்டு.
பாடலில் காதலியைத் தேடுகிறார், ஆனால் படத்தின் தலைப்போ..
யாரடி நான் தேடும் காதலி – பொண்டாட்டி தேவை
எமது ராஜா இசைப் புதிர்ப் போட்டிக் குடும்பத்தில் ஒருவரான சகோதரி உஷா அவர்கள் மறைந்து விட்டார் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் இருந்து தொடர்ச்சியாகப் பங்கெடுத்துக் கொண்ட தீவிர இசை ரசிகர் அவரது இழப்பின் வேதனையில் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கிறோம்.
இன்று பாடலாசிரியர் கங்கை அமரன் பிறந்த நாளுக்கான சிறப்புப் பாடல் அரங்கேறுகின்றது. இதை அவரின் அருமை நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களே பாடிச் சிறப்பிக்க, துணைக் குரலாக எல்.ஆர்.அஞ்சலியுடன் குழுவினர் சேர்ந்து பாடுகிறார்கள்.
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஒரு யுகத்தின் முடிவு அல்லது எல்லையின் உச்ச பட்ச இசையாகத் தோன்றும். படத்தின் முக்கிய காட்சிக்கு முந்தியதாக அமையும். எவ்வளவு ஆர்ப்பரிப்பு.
ரஜினிகாந்த் வாழ்வில் மறக்க முடியாது மலர்ந்த படங்களில் ஒன்று இது.
ராமன் ஆண்டாலும் – முள்ளும் மலரும்
எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினருடன் பாடும் பாடல். இந்தப் பாடலின் ஒலித்தரமே வெகு உச்சமாக இருக்கும்.
கவிஞர் வாலியின் வரிகளோடு அமைந்த பாடல்.
முரளி நடித்த படமிது. தர்மம் இல்லைன்னா பதில் உண்டு.
முத்துமணி முத்துமணி – அதர்மம்