சித்ரா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். பாடல் வரிகள் கவிஞர் வாலி.
ஹிஹி அமலாவே தான் படம் முழுக்க.
வாம்மா வா சண்டிராணி – கற்பூரமுல்லை
சித்ரா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். பாடல் வரிகள் கவிஞர் வாலி.
ஹிஹி அமலாவே தான் படம் முழுக்க.
வாம்மா வா சண்டிராணி – கற்பூரமுல்லை
மனோ, எஸ்.பி.சைலஜா & குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிராக.
மலையாளத்தின் புகழ் பூத்த இயக்குநர் தமிழில் இயக்கிய படங்களில் ஒன்று.
பாடல் கவிஞர் வாலி.
தாயறியாத தாமரையே – அரங்கேற்ற வேளை
ஒரு பெரும் மந்திர உச்சாடனம் போலவொரு இசை ரீங்காரம், ஒரு நிமிடம் தாண்டிப் பரிணமிக்கும் இந்தக் கோப்பு பாடலின் ஆரம்பம் இடையிசைகளெனக் கோவையாகக் கலந்து பகிர்கிறேன். ஆனால் கேட்கும் போது இது தனித்து நின்று ஒரே ஸ்தாயில் கோரஸ் கூடமும் எஸ்.ஜானகியுமாக ஆர்ப்பரிப்பது போலொரு உணர்வு. என்னவொரு அழகான பாடல். ஆனால் திரைக்கு வராத துரதிஷ்டம் கொண்டது.
ஆனாலும் என்ன? ஜெயச்சந்திரன் அவர்களது பிறந்த நாளில் இந்த மாதிரிப் பொக்கிஷப் பாடல்களோடே கொண்டாட வேண்டும் என்று எஸ்.ஜானகி கூட்டுக் குரல்களோடு கூட்டுச் சேரும் இந்தப் பாடலை எடுத்து வந்திருக்கிறேன்.
பாடல் வரிகள் கவிஞர் வாலி. வெளிவராத படமொன்று. ஆனால் இசை ரசிகர்களின் நெஞ்சத்தில் என்றென்றும் மலராய் இருக்கும்.
பூமியில் தேடாமல் வானத்தைத் தேடுங்கள்.
வானம் எங்கே மேகம் எங்கே – நெஞ்சிலாடும் பூ ஒன்று
எஸ்.ஜானகி, அருண்மொழி குழுவினர் கூடிப் பாடும் பாடல் இன்றைய புதிரில்.
இயக்குநரே நாயகன்.
இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.
ராஜா ராஜாதான் – ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
இன்றைய சிவராத்திரி தினத்துக்கேற்றதொரு பாடல். இந்தக் கடவுள் பாட்டுக்கெல்லாமா க்ளூ வேண்டும்?