
கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கு கவிஞர் வாலி பாணியில் ஒரு பாட்டு எழுதக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியே இசையெனும் இன்ப வெள்ளம் கலக்க, தன் பக்திப் பெரு வரிகளால் ஆன்மிக உலகுக்குள் எம்மை இருத்துகிறார் இந்தப் பாடலில்.
பாடலைக் கண்டு பிடிப்பது மட்டுமல்ல இங்கே இரண்டு ஆலாபனைத் துணுக்குகளை இணைத்துக் கொடுத்திருக்கிறேன் கேட்டுப் பாருங்கள் மெய் சிலிர்க்க வைக்கும்.
பாடலை பி.சுசீலா அவர்களுடன் இன்னொரு பாடகி பாடினாலும் ஏனோ அவர் மட்டும் தான் என்ற கணக்கில் போட்டு விட்டார்கள்.
மோகன் படங்களில் முத்துலிங்கம் அவர்களின் பாடல்கள் விசேஷம் என்றால் இது இளமைக் கோலமாய் அமைந்த ஆன்மிக விசேஷம்.
ராகவனே ரமணா ரகுநாதா – இளமைக் காலங்கள்