கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
ராஜாவும் கமலும் இணைந்த இன்னொரு காவியப் படம்.
அழகே அழகு தேவதை – ராஜ பார்வை
கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
ராஜாவும் கமலும் இணைந்த இன்னொரு காவியப் படம்.
அழகே அழகு தேவதை – ராஜ பார்வை
பிரபல நாயகனின் மூன்றெழுத்துப் படத்தில் இருந்து இன்றைய பாடல்.
லலிதா சாகரி, சுந்தரராஜன் & சாய்பாபா குழுவினர் பாடுகிறார்கள்.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
நகரு நகரு வருது வருது – சத்யா
எஸ்.ஜானகி அவர்களின் அற்புதமான ஆலாபனை சரணங்களில் பாயும் அந்தத் துளிகளோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கூட்டுச் சேர்ந்த பாடல்.
சும நாயகன், சும நாயகி என்று கிசு கிசு கணக்கா க்ளூ வேற, இருவரையும் தேடுங்கள்.
அப்புறம் படம் கிடைத்ததும் பாடலை ஆராதனை செய்யுங்கள்.
ஒரு குங்கும செங்கமலம் – ஆராதனை
எம்.ஜி.வல்லபன் அவர்களின் பாடல் வரிகளுக்கு இளையராஜாவும், கே.ஜே.ஜேசுதாசும் பாடும் பாடலிது.
சிவகுமார் நடித்த இன்னொரு படத்திலும் இந்தப் பாடக ஜோடி இருந்தாலும் இது அதிகம் பேர் நினைவில் நிற்காத இன்னொரு படம் 🙂
மௌனமே மௌனமே மௌனமே மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் – உறங்காத நினைவுகள்
சித்ரா பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
மணிவண்ணன் இயக்கத்தில் மோகன் நடித்த படங்களில் ஒன்று.
கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே – தீர்த்தக் கரையினிலே