பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் இன்றைய பாடல் இடம்பெறுகிறது.
இந்தப் படத்தின் தலைப்பில் வீட்டில் வளர்க்கப்படும் பிராணியின் பெயர் உண்டு.
எஸ்.ஜானகி பாடிய தனிப்பாடல் இது. ஜி.என்.ரங்கராஜன் இயக்கம்.
என் நெஞ்சம் உன்னோடு – ருசி கண்ட பூனை
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் இன்றைய பாடல் இடம்பெறுகிறது.
இந்தப் படத்தின் தலைப்பில் வீட்டில் வளர்க்கப்படும் பிராணியின் பெயர் உண்டு.
எஸ்.ஜானகி பாடிய தனிப்பாடல் இது. ஜி.என்.ரங்கராஜன் இயக்கம்.
என் நெஞ்சம் உன்னோடு – ருசி கண்ட பூனை
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் எத்தனையோ அதி அற்புதமான பாடல்களை அள்ளி வழங்கிய எஸ்.ஜானகி அவர்களின் பிறந்த நாளுக்கான சிறப்புப் பாடல் இது.
ரஜினி நடித்த படம் என்பதால் முரட்டுத் தனமாகத் தேட வேண்டியதில்லை.
இந்த வாரம் தொடர்ந்து எஸ்.ஜானகி அவர்களின் தனிப்பாடல்கள் சுற்று.
எந்தப் பூவிலும் வாசம் உண்டு எந்தப் பாட்டிலும் ராகம் உண்டு – முரட்டுக்காளை
பழநி பாரதி அவர்களின் வரிகளுக்கு திப்பு, மஞ்சரி பாடும் பாடலிது.
தெலுங்கு, ஹிந்தியில் புகழ் பூத்த இயக்குநர் அந்தந்த மொழிகளில் எடுத்துத் தமிழில் மொழி மாற்றிய படம். முன்னர் இதே பெயரிலும் படம் எடுத்திருக்கிறார். ஆண்டை மட்டும் சேர்த்து விட்டார்.
பாடலோடு வருக.
சொல்வதற்கு ஒரு சொல் இல்லையா – உதயம் 2006
பி.சுசீலாவோடு , மலேசியா வாசுதேவன் இணைந்து பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
இயக்குநர் கோகுல கிருஷ்ணா இயக்கிய படங்களில் ஒன்று. மோகனும் நடித்த படமிது.
இந்தப் பாடலில் தோன்றுவது இன்னொரு நாயகன் சந்திரசேகர்.
பார்த்தா பச்ச பாப்பா போட்டா ரெட்ட தா(ழ்)ப்பா.. – அர்ச்சனைப் பூக்கள்
நா.காமராசன் அவர்களின் வரிகளுக்கு இளையராஜா பாடும் பாடல் இன்றைய புதிரில்.
அடிக்கிற வெயிலுக்கு நல்லா அடிச்சு ஊத்தினா எப்படி இருக்கும் பாருங்க? சரி நீங்க பதிலோடு வாங்க.
துப்பாக்கி கையில் எடுத்து – கோடை மழை