பி.எஸ்.சசிரேகா குரலில் ஆலாபனையோடு பி.பானுமதி அவர்களின் குரலில் ஒலிக்கும் இனிமை சொட்டும் பாட்டு இன்றைய போட்டியில். படத்திலும் முக்கிய நாயகி பானுமதி அவர்களே.
காளிமுத்து அவர்களின் கை வண்ணத்தில் பாடல் வரிகள்.
வாடா மல்லியே நான் – கண்ணுக்கு மை எழுது
பி.எஸ்.சசிரேகா குரலில் ஆலாபனையோடு பி.பானுமதி அவர்களின் குரலில் ஒலிக்கும் இனிமை சொட்டும் பாட்டு இன்றைய போட்டியில். படத்திலும் முக்கிய நாயகி பானுமதி அவர்களே.
காளிமுத்து அவர்களின் கை வண்ணத்தில் பாடல் வரிகள்.
வாடா மல்லியே நான் – கண்ணுக்கு மை எழுது
இன்றைய பாடலை எழுதியவர் பழநி பாரதி. ஹரிஹரன் & பவதாரணி குரல்களில் ரம்யமாக வீசுகிறது.
தென்றல் வரும் வழியை – ஃப்ரெண்ட்ஸ்

இசைஞானி இளையராஜாவின் பாடல் இசைத்துணுக்குகளோடும், ஆலாபனைகளோடும், கூட்டுக் குரல்களோடும் அமையும் இந்தப் போட்டி இன்றைய நாள் 1000 ஆவது போட்டியைக் காண்கிறது.
இன்று உலக இசை தினம் என்பது வெகு சிறப்பு.
#RajaChrousQuiz 500 போட்டிகளையும்
#RajaSoloQuiz 200 போட்டிகளையும்
#RajaDuetQuiz 200 போட்டிகளையும் முந்திய சுற்றுக்களில் கண்டதோடு
தற்போது தொடரும் #RajaMusicQuiz தனது 100 வது போட்டியோடு சேர்த்து இந்த இலக்கு எட்டப்பட்டிருக்கிறது. இதுவரை தொடர்ந்து ஆதரவளிக்கும், நேர்மையாகப் பதிலளிக்கும் அன்பு உள்ளங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.
இன்றைய போட்டி ஸ்பெஷலாக இசைஞானி இளையராஜா & எஸ்.ஜானகி இணைந்த ஆலாபனையோடு 1 நிமிடம் 4 வினாடிகளோடு நீண்ட இசைத்துணுக்காக அமைகிறது.
ஜானகியம்மாவின் அந்த ஆலாபனைக்கு ஈடேது. பாடலோடு வருக.
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட – மெட்டி
நா.காமராசன் அவர்களின் வரிகளோடு இன்றைய பாடல். கமல்ஹாசன் நடித்த இந்தப் படத்தை இயக்கியவரும் இன்னொரு நடிகர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா பாடுகிறார்கள்.
எத்தனை நிமிஷம் வேணும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள், பதிலோடு வருக.
தேவை இந்த பாவை தானே தெய்வலோகம் – அந்த ஒரு நிமிடம்
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாட்டு. படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கும் பாடல்.
எஸ்.ஜானகி & மலேசியா வாசுதேவன் பாடுகிறார்கள்.
உனக்கும் எனக்கும் ஆனந்தம் – ஶ்ரீ ராகவேந்திரர்