உலகத் தாய்மொழி நாளில் நம் தமிழைக் கொண்டாடும் பாட்டு.
புலவர் புலமைப்பித்தன் வரிகளில் பி.சுசீலா & உமா ரமணன் குரல்களில் ஒலிக்கின்றது.
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – கோவில் புறா
உலகத் தாய்மொழி நாளில் நம் தமிழைக் கொண்டாடும் பாட்டு.
புலவர் புலமைப்பித்தன் வரிகளில் பி.சுசீலா & உமா ரமணன் குரல்களில் ஒலிக்கின்றது.
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – கோவில் புறா
நம்மோடு பாடல்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மலேசியா வாசுதேவனது பாடல் இன்றைய போட்டியில். கவிஞர் வாலியின் வரிகளில் கே.பாக்யராஜ் படமிது.
தாலாட்ட நான் பொறந்தேன் – தூறல் நின்னு போச்சு
இயக்குநர் கே.விஸ்வநாத் அவர்களது பிறந்த நாள் நினைவில் இன்று உதிக்கும் பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா பாடியது.
வைரமுத்து வரிகள். இந்த ஓசை கேட்டாலேயே பதிலோடு வருவீர்களே?
வேதம்… அணுவிலும் ஒரு நாதம் – சலங்கை ஒலி
கவிஞர் வாலியின் வரிகளில் இன்றைய பாடல்.
சித்ராவோடு மனோ பாடுகிறார். நாலு பேரை நினைத்தால் ஒருவருக்கு வரும் பாட்டு.
சிவராத்திரி தூக்கம் ஏது – மைக்கேல் மதன காமராஜன்
பாடகர் எஸ்.என்.சுரேந்தர் பிறந்த நாளில் அவர் எஸ்.ஜானகியோடு பாடிய அற்புதமான அதிகம் அறியப்படாத பாடல் இது. பாடல் முழுக்க அற்புதமான ஆலாபனையைக் கொடுத்துக் கொண்டே போவார். இந்தச் சுற்றுக்கு மிகக் கச்சிதமாக அமைந்த பாட்டு.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
“அ” என்ற எழுத்தில் தொடங்கும் ஐந்தெழுத்துப் படம். இதற்கு மேல் க்ளூ சொல்ல எனக்கு அதிகாரமில்லை.
ஐவகை மலர்களைக் கை வழி மன்மதன் எடுப்பதும் தொடுப்பதும் இதம் – அதிகாரம்