இயக்குநர் டி.பி.கஜேந்திரன் இயக்கிய படத்தில் இருந்து ஒரு பாட்டு.
வான் மழையைக் கொண்டாடிப் பாடுகிறார்கள் கே.ஜே.ஜேசுதாஸ் & மின்மினி கூடவே கூட்டிசைக் குரல்களுமாய்.
ஓ மாரி பூ மாரி – பாட்டு வத்தியார்
இயக்குநர் டி.பி.கஜேந்திரன் இயக்கிய படத்தில் இருந்து ஒரு பாட்டு.
வான் மழையைக் கொண்டாடிப் பாடுகிறார்கள் கே.ஜே.ஜேசுதாஸ் & மின்மினி கூடவே கூட்டிசைக் குரல்களுமாய்.
ஓ மாரி பூ மாரி – பாட்டு வத்தியார்
கவிஞர் வாலி அவர்களின் நினைவு நாளில் இன்று அவரின் வரிகளில் அமைந்த பாட்டு. அது மட்டுமல்ல இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதியதோடு, திரைக்கதை, வசனப் பங்களிப்புக் கூட அவரே.
எஸ்.ஜானகி குழுவினரோடு பாடுகிறார்.
இந்தப் படத்தின் தலைப்பு எஸ்பிபி கமலுக்காகப் பாடிய பாடலொன்றை நினைவுபடுத்தும்.
வானில் பறக்கும் பறவைக்கூட்டம் – கடவுள் அமைத்த மேடை
இன்று இயக்குநர் இமயம் பாரதிராஜா பிறந்த நாளில் அவரின் ஒரு பாடலின் இரண்டு இடையிசைப் பகுதியில் வரும் கோரஸ் குரல்களைப் போட்டிக்காகத் தருகின்றேன்.
பாடலைக் கூட்டுக் குரல்களோடு பாடியவர் ஜென்ஸி.
பாடலைக் கேட்டாலேயே அந்தப் பெண்ணோடு கூடிக் குலாவும் பறவை ஒலிகள் போலவே இருக்கும்.
கண்ணதாசன் வரிகளில் காலம் கடந்தும் மாறாது இனிக்கும் பாட்டு.
இரு பறவைகள் மலை முழுவதும் – நிறம் மாறாத பூக்கள்
தேவாவோடு சேர்ந்து வெற்றிகளைக் குவித்த இயக்குநர் பெரும் எடுப்பில் ராஜாவோடு இணைந்த படம்.
பாடல்கள் அதகளம் என்றாலும் ரசிகர்கள் “காதலிக்காத” படம்.
வாலி வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டுச் சேர்ந்த பாட்டு.
எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன – ஐ லவ் இந்தியா
இசைஞானி இளையராஜா பாடும் பாட்டு கங்கை அமரன் வரிகளில் ஒலிக்கின்றது.
இந்தப் படம் நடிகர் பிரபுவைத் தனித்துவமாக அடையாளப்படுத்தும்.
ஒரு காவியம் அரங்கேறும் – அறுவடை நாள்