#RajaChorusQuiz 20 வள்ளி தேடிப் போனா

கங்கை அமரன் இயக்கிய ஒரு படத்தில் இருந்து அட்டகாஷ் கிராமியப் பாடல் ஒன்று. மலேசியா வாசுதேவனும், சித்ராவும் குழுவினருடன் பாடும் இந்தப் பாடல் கிராமியப் பாடல்களில் மலேசியா வாசுதேவனின் தனித்துவத்தைக் காட்டும் இன்னொன்று.

கம்மாக்கரைப் பக்கம் போய் பாடலைத் தாங்கய்யா என்று கேட்காமல் தேடிப் பிடித்து பாடலோடு வருக

கூடலூரு குண்டுமல்லி – கும்பக்கரை தங்கய்யா

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 19 சொல் பேச்சுக் கேளடா

ஒரு நடிகரின் குரலில் அவரின் பெருமையை அவரே பாடுவது எப்பேர்ப்பட்ட புதுமை. அதில் வெற்றி கண்டிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். பாடல் வரிகள் வாலியார் வேறு சொல்லவா வேண்டும்?

இந்தப் பாடலின் தொடக்கத்திலும், இடையிலும் வரும் துள்ளிசைக் குரல்களை இணைத்து தருகிறேன். பாடகரின் எண்ணவோட்டத்தை ஆமோதிப்பது போலத் துள்ளிக் குதிக்கிறார்கள் பாருங்கள்.

சூராதிசூரர்களே கோட்டை விடாமல் பாடலோடு வருக.

அப்பன் பேச்ச கேட்டவன் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

Posted in Uncategorized | 36 Comments

#RajaChorusQuiz 18 ஆடிக் காற்றில் ஆடுது தீபம்

கவிஞர் முத்துலிங்கம் அவர்களது வரிகளில் ஒரு பாட்டு. இங்கே படத்தில் உமா ரமணனுக்கும், இளையராஜாவுக்குமாகத் தனித்தனி. போட்டியில் பகிர்வது இளையராஜா பாடும் தனிப்பாட்டின் இடையிசை.

இளையராஜாவின் தனிப் பாடல் பட்டியலில் முதல் பத்துக்குள் வரக்கூடிய அற்புதம் நிறைந்த பாட்டு.

ஆறும் அது ஆழம் இல்ல – முதல் வசந்தம்

Posted in Uncategorized | 58 Comments

#RajaChorusQuiz 17 சின்னக்குயில் சித்ராவின் பிறந்த நாள் கொண்டாட்டம்

இன்று பின்னணிப் பாடகி சித்ரா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு எடுத்து வைத்திருக்கும் கூட்டுக் குரல் ஒரு தேமதுரம்.

கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடன் சித்ரா இணைந்து பாடிய பாடல்கள் தனி அழகு அதிலும் இந்தப் பாட்டைக் கேட்டால் உங்கள் மனசே உங்களிடம் இராது.

இந்தப் பாடல் ஒரு கிராமியப் பாடல் என்ற அந்தஸ்தைப் பெற்று நிற்பதால் கோரஸ் குரல்கள் கொடுக்கும் சந்தமும் மேற்கத்தேய இசையைக் கிராமியத்தோடு வெகு சிறப்பாக இணைகின்றது. பாடலாசிரியர் நா.காமராசன், இளையராஜா கூட்டணியின் இன்னொரு முத்து இது.

மணக்க மணக்க ஒரு முழம் மல்லிகைப்பூவை முகர்ந்து திளைக்கும் உணர்வு பாடலைக் கேட்கும் போதெல்லாம்.
நோய் நொடி இல்லாமல் பதிலாக வா 🙂

மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ – பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

Posted in Uncategorized | 53 Comments

#RajaChorusQuiz 16 முத்துக் குளிக்க வாரீகளா

இன்றைய பாடலை ஆஷா லதா, லேகா குழுவினர் பாடுகின்றார்கள்.

ராசாவை வைத்து எத்தனை படம் தயாரித்திருப்பார் இவர் இவரே தயாரித்து, இயக்கம் எல்லாமே செஞ்ச படம் இது.

கவிஞர் வாலி எழுதிய பாட்டு டண்டண்டண் டாண் டண்

தூத்துக்குடி முத்து – எல்லாமே என் ராசாதான்

Posted in Uncategorized | 38 Comments