#RajaChorusQuiz 25 என் தோளில் சாய வா

இசையரசி பி.சுசீலா பாடும் இனிய பாடல் கங்கை அமரன் வரிகளில் தென்றலாக வீசுகின்றது.

கை கூடாத காதல் சுமையோடு, தன்னைத் தேடி வருபவனைக் கைப் பிடிப்பவள் தன் வாழ்க்கைப் பாடத்தைப் படிக்கத் தொடங்கும் போது எழும் ஆர்ப்பரிப்பாக இந்தப் பாடலின் முன் மிதப்பில் எழும் கோரஸ் குரல்கள். வெறும் வாய் ஜாலமே என்று ஒதுக்க முடியாதவாறு இந்தக் குரல்களின் கூட்டணியோடு வயலின் குழுவும் சேரும் போது பிரித்தே பார்க்க முடியாத ஒத்திசைவு வருகின்றது.

இந்த மாதிரியான பாடல்களைக் காட்சிச் சூழலோடு பொருத்திப் பார்க்கும் போது இளையராஜாவின் தேவை உணரப்பட்டு நெஞ்சை அள்ளும்.

ஏ தென்றலே இனி நாளும் – நெஞ்சத்தை கிள்ளாதே

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 24 உலகங்கள் பொய்யானதே

பொன்னருவியின் வரிகளில் மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாட்டு இது.

பாடலின் காட்சிச் சூழல் போலவே அமானுஷ்ய உலகில் நிகழ்த்துமாற் போலொரு இசையில் கூட்டு குரல்களும் அதை வலுப்படுத்துகின்றன.

படத்தின் தலைப்பிலேயே மதங்கள் ஒன்றிணைந்திருக்கும்.

இதயமே நாளும் நாளும் காதல் பேச வா – படம் அடுத்தாத்து ஆல்பர்ட்

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 23 ஏட்டிக்குப் போட்டி

இன்றைய கோரஸ் போட்டியில் கூட்டுக் குரல்கள் சங்கீதக் குரல் எழுப்பும் பாங்கில் அமைந்திருக்கின்றது.

பாடல் வரிகள் குருவிக்கரம்பை சண்முகம். பாடியவர்கள் மனோ & சித்ரா, குழுவினர்.

ஒரு அரசியல்வாதி நடிக்க ஆசைப்பட்டு காக்கிச் சட்டை போட்ட படம்.

இதழ் இனிக்க இசைக்கும் – அக்னி பார்வை

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 22 கூவும் கூட்டம்

இன்று கூட்டுக் குரல்கள் எழுப்பும் ஓசை ஒரு வனத்தில் வாழும் மாந்தர்களின் பாஷையோ?

இந்தக் கூட்டுக் குரல்களோடு இணைந்து பாடுபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

மலையாள நாயகன் நடித்த படமிது. நாயகியும் அங்கிருந்து வந்தவர் தான்.

வனக்குயிலே குயில் தரும் – ப்ரியங்கா

Posted in Uncategorized | 54 Comments

#RajaChorusQuiz 21 கோடியில் நீ ஒருவன்

புரட்சிக் கலைஞர் எங்கள் கேப்டனுக்காகக் கிடைத்த அற்புதமான காதல் ஜோடிப் பாடலோடு இன்றைய புதிர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர் இணைந்து பாடும் இந்தப் பாட்டைக் கேட்டாலேயே உற்சாக வெள்ளம் பெருக்கெடுக்கும். அப்படியொரு பாட்டு.

பாடலின் ஆரம்பத்தில் தமக்கென்றொரு தனித்துவமான குதூகலத் துள்ளலோடு பாடலை ஜோடிக்குக் கையளிக்கும் கோரஸ் குழு அப்படியே பாட்டிலும் இழைந்து அழகுபடுத்தியிருக்கிறார்கள்.

கங்கை அமரனின் வரிகளில் ஒரு காதல் கொண்டாட்டம்.

அழகிய நதியென – பாட்டுக்கு ஒரு தலைவன்

Posted in Uncategorized | 45 Comments