புனித கிறிஸ்துமஸ் தினத்தில் மலேசியா வாசுதேவன், குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய திரைப்புதிர்.
பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். சிவாஜி கணேசன்களும் , பிரபுவும் இணைந்து நடித்த படமிது.
உலகமெலாம் பருவமழை ( தேவனின் கோவிலிலே) – வெள்ளை ரோஜா

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களது நினைவு தினத்தில் கவிஞர் வாலி அவர்களது பாடலோடு இன்றைய போட்டி.
பாடலை மனோ குழுவினர் பாடுகிறார்கள். எம்.ஜி.ஆரின் படத் தலைப்பில் இருந்து உருவிய தலைப்புத் தான் இதுவும்.
இந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூ வேண்டுமா? ஆட்டோவில் தேடாதீர்கள்.
ஒத்திப்போ ஒத்திப்போ – ரிக்ஷா மாமா
எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போஸ்லே குழுவினருடன் பாடும் அதியற்புதமான பாட்டு.
இந்தப் பாடலின் மெட்டுப் போலக் கூட்டுக் குரல்கள் கொடுக்கும் இனிய நாத வெள்ளம்.
நா.காமராசன் அவர்களது வரிகளில் அமைந்த பாடல். ஒரு வில்லனை நாயகனாக்கி அழகு பார்த்த படங்களில் ஒன்று.
ஒரு தேவதை வந்தது – நான் சொன்னதே சட்டம்
கவிதா கிருஷ்ணமூர்த்தி அரிதாகத் தமிழில் பாடிய ஜோடிப் பாடல்களில் ஒன்று.
ரோஜாவும், தமிழ் சினிமாவின் ராஜாவும் இணைந்து கலக்கிய பாட்டு.
இதுவும் கவிஞர் வாலி வரிகள்.
முத்திரை இப்போது – உழைப்பாளி
மனோ குழுவினருடன் சேர்ந்து பாடும் ஒரு கலக்கல் பாடல் இன்றைய புதிரில்.
பட்டிக்காடா பட்டணமா என்று பட்டிமன்றம் வைப்பது போல பிரபு & குஷ்பு தோற்றத்தில் வந்த படப் பாடல்.
கவிஞர் வாலி அவர்கள் இன்னொரு பாடலாசிரியரைப் புகழ்ந்து தொடங்கும் வரிகள்.
பாவலரு பாட்டு இது பண்ணைப்புரப் பாட்டு – உத்தமராசா