கங்கை அமரன் வரிகள் எழுதிய பாடல், கமல்ஹாசன் படம்.
இயக்கியவர் ஒரு காலத்தின் குணச்சித்திர நடிகர்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகின்றார்கள்.
பச்சோந்தியே கேளடா – அந்த ஒரு நிமிடம்
கங்கை அமரன் வரிகள் எழுதிய பாடல், கமல்ஹாசன் படம்.
இயக்கியவர் ஒரு காலத்தின் குணச்சித்திர நடிகர்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகின்றார்கள்.
பச்சோந்தியே கேளடா – அந்த ஒரு நிமிடம்
கவிஞர் வாலியின் வரிகளில் இன்றைய பாடல்.
மனோ, ஸ்வர்ணலதா குழுவினர் பாடுகின்றார்கள்.
வாரிசு நடிகர் இரட்டை வேடம் கொண்டு நடித்தது, ஒன்று போலீஸ் வேஷம்.
கூடையில் என்ன பூ அன்பே
அன்பே வா அன்பென்னும் வெண்பா – தர்மசீலன்
பாடலாசிரியர் மு.மேத்தா முன்னர் மோகனுக்காக எழுதிய வரிகளில் அமைந்த இன்னொரு படத்தலைப்பு. இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் கவிஞர் வாலி.
பாடகி சித்ரா குழுவினர் பாடும் பாடலில் நெல்மணிகள் சிதறுமாற் போலக் கொட்டும் நவீன இசை. கோரஸ் குரல்களில் தான் எவ்வளவு துள்ளல் ஆகா.
குத்தம்மா நெல்லுக் குத்து – பாடு நிலாவே
இன்று இளைய திலகம் பிரபு பிறந்த நாளில் அவரின் கலக்கலான குழுப்பாடல் ஒன்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது குரலில் மிளிர்கின்றது.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த படங்களில் ஒன்று. குஷ்பு ஜோடி கட்டிய படம்.
பாக்கு வெத்தல போட்டேன் பத்தல – மை டியர் மார்த்தாண்டன்
கவிஞர் வைரமுத்து வரிகளில் வாணி ஜெயராம் பாடலில், ஜதி போடும் கோரஸ் குரல்களோடு
ஆலாபனை செய்யும் ஜெயச்சந்திரன்.
இந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூ வேண்டுமா என்று நீங்கள் புன்னகைப்பது தெரிகிறது.
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் – புன்னகை மன்னன்