இன்றைய பாடலை கே.ஜே.ஜேசுதாஸுடன் வாணி ஜெயராம் மற்றும் குழுவினர் பாடுகிறர்கள்.
பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து. மோகன் நடித்த படங்களில் ஒன்று இது. பதிலோடு ஓடி வாங்கோ 🙂
இதழில் அமுதம் தினமும் – அன்பே ஓடி வா
இன்றைய பாடலை கே.ஜே.ஜேசுதாஸுடன் வாணி ஜெயராம் மற்றும் குழுவினர் பாடுகிறர்கள்.
பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து. மோகன் நடித்த படங்களில் ஒன்று இது. பதிலோடு ஓடி வாங்கோ 🙂
இதழில் அமுதம் தினமும் – அன்பே ஓடி வா
இன்று பவதாரணி பிறந்த நாளில் அவர் உன்னிகிருஷ்ணனோடு ஜோடி கட்டிய ஒரு பாடல். கோரஸ் குரல்களை அழகாகப் பயன்படுத்திய ஆமோதிப்பில் பாடல் சொக்க வைக்கும்.
இந்தப் படத்தின் தலைப்பு பழைய பாடல் ஒன்றின் முதல் வரி.
இந்தக் காதல் செய்யும் வேலை – கண்களின் வார்த்தைகள்
பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளோடமைந்த இனிய பாடல் இன்றைய போட்டியில்.
உமா ரமணன், இளையராஜா & குழுவினர் பாடுகின்றார்கள்.
மேகங்கருக்கையிலே புள்ள தேகம் குளிருதடி – வைதேகி காத்திருந்தாள்
பவதாரணி குழுவினருடன் பாடும் இனிய நாதம் இன்றைய போட்டியில்.
படத்தின் மீதி அனைத்துப் பாடல்களையும் கோட்டை கட்டிய இயக்குநரே எழுத, இந்தப் பாடல் மட்டும் இளையராஜா கைவண்ணம்.
அலை மீது விளையாடும் – காதல் கவிதை
நாயகனே பாடகராகவும் அமைந்து தான் ஒரு பன்முகக் கலைஞன் என்று காட்டிய படங்களில் ஒன்று.
இங்கே கூட்டுக் குரல்களோடு அவர் பாடும் பாடலை வாலி எழுதியிருக்கிறார்.
கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் – கலைஞன்