மனோ குழுவினரோடு இன்றைய போட்டி. கவிஞர் வாலியின் வரிகளில் நீங்க சரியாகச் சொன்னால் ரைட்டு ரைட்டு 🙂
பாண்டியனா கொக்கா கொக்கா – பாண்டியன்
மனோ குழுவினரோடு இன்றைய போட்டி. கவிஞர் வாலியின் வரிகளில் நீங்க சரியாகச் சொன்னால் ரைட்டு ரைட்டு 🙂
பாண்டியனா கொக்கா கொக்கா – பாண்டியன்

இசைஞானி இளையராஜாவும், கங்கை அமரன் அவர்களும் இணைந்த பாடலிது. பாடுபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.
கங்கை அமரன் வரிகளோடு கோரஸ் துணை நிற்க பாடும் நிலாவின் பாசப் பாட்டு இது.
ஆணென்ன பெண்ணென்ன
நீ என்ன நான் என்ன – தர்மதுரை
இன்றைய போட்டிப் பாடல் கங்கை அமரன் அவர்கள் வரிகளில் அமைகின்றது.
சின்னக் குயில் சித்ரா குழுவினரோடு பாடுகிறார். மலையாளத்தில் இருந்து வந்த இயக்குநர் ஏற்கனவே மலையாளத்தில் வெளிவந்த படத்தைத் தமிழுக்காக எடுத்தது.
அட இந்தப் படத்திலும் நாயகி அமலா.
மஞ்சள் நீராட்டு புது மஞ்சள் நீராட்டு – இல்லம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குழுவினர் பாடும் காதல் துள்ளாட்டப் பாடல் இன்றைய புதிராக.
இந்தப் படம் தெலுங்கிலிருந்து மொழி மாற்றியது. அந்தப் படத்தை இயக்கியவோரோ இன்னொரு மொழியில் பிரபல இயக்குநராக ஆரம்பித்தவர். நாகார்ஜூனாவும் ஹிஹி அமலாவும் ஜோடி.
மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் – சம்பவம்
இன்றைய போட்டிப் பாடல் காதலர் தினச் சிறப்புப் பாடலாக அமையும் ஒரு இனிமை சொட்டும் கீதம்.
எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள்.
வைரமுத்துவின் வரிகளோடு அமையும் இந்தப் பாடல் பலரின் இளமை நாட்களை நினைப்பூட்டும்.
இசை மேடையில் இந்த வேளையில் – இளமைக்காலங்கள்