கங்கை அமரன் வரிகளோடமைந்த பாடல் இன்றைய போட்டியில்.
மாதங்களில் ஒன்று படத் தலைப்பில் இருக்கும்.
கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா குழுவினரோடு பாடுகிறார்கள்.
மாலைகள் இடம் மாறுது – டிசம்பர் பூக்கள்
கங்கை அமரன் வரிகளோடமைந்த பாடல் இன்றைய போட்டியில்.
மாதங்களில் ஒன்று படத் தலைப்பில் இருக்கும்.
கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா குழுவினரோடு பாடுகிறார்கள்.
மாலைகள் இடம் மாறுது – டிசம்பர் பூக்கள்

இன்றைய திரைப் புதிர் பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்களின் பிறந்த நாள் சிறப்புப் பாடலாக ஒலிக்கின்றது.
அதிகம் அறியப்படாத அரிய, ஆனால் அழகான பாடலிது. இன்று தான் இந்தப் பாடலை முதன் முதலில் கேட்பவர்கள் இனி அடிக்கடி கேட்பீர்கள்.
கங்கை அமரன் வரிகள்.
பிரபு நாயகனாக நடித்த திரைப்படமிது.
அற்புதமான கூட்டுக்குரல்களோடு பாடல் அழகியலாகப் பிறக்கும்.
வான் மீதிலே அதிகாலை நேர ராகம் – ராகங்கள் மாறுவதில்லை
உன்னிகிருஷ்ணனும் வட நாட்டுப் பாடகியும் பாடும் பாடலோடு அணி சேர்க்கும் ஆரம்ப ஆலாபனை.
இந்தப் படத்தில் நடித்தவர்களில் நாயகன் இந்த லோகத்தின் உச்ச நட்சத்திரம் ஆகி விட்டார்.
அல்லா உன் ஆணைப்படி – சந்திரலேகா
இன்றைய போட்டிப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள்.
பிரபுவும் ராசியான ஜோடியும் சேர்ந்து பட்டிக்காடா பட்டணமா போல கெட்டப் காட்டிய படம்.
கவிஞர் வாலி வரிகள்.
நல்ல நேரம் எதைத் தொட்டாலும் பொன்னாகுது – உத்தமராசா
முக்கிய அறிவிப்பு: இந்தப் போட்டி நாளை ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை இடம்பெறாது.
மீண்டும் எப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பிக்கும்.
நா.காமராசன் அவர்களது வரிகளில் அமைந்த பாடலொன்று இன்றைய புதிரில்.
எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள்.
ஜீவிதா நாயகியாக நடித்த படங்களில் ஒன்று. ஆனால் இந்தப் பாடல் இன்னொரு நாயகியின் கவர்ச்சிக் கொண்டாட்டமாக இருக்கும்.
மொட்டு தான் இது இது தர்ம பத்தினி