இளையராஜா குழுவினர் பாடும் இந்தப் பாடல் ஒரு சோக ராகம் மூன்றெழுத்துப் படத்துக்காக கவிஞர் வாலி எழுதிய 90 களின் கீதம்.
என்ன என்ன கனவு கண்டாயோ – வள்ளி
இளையராஜா குழுவினர் பாடும் இந்தப் பாடல் ஒரு சோக ராகம் மூன்றெழுத்துப் படத்துக்காக கவிஞர் வாலி எழுதிய 90 களின் கீதம்.
என்ன என்ன கனவு கண்டாயோ – வள்ளி
இன்றைய போட்டியில் மனோ, வாணி ஜெயராம் & குழுவினர் பாடுகின்றனர். இந்தப் படம் சத்யராஜ் நடித்து அதிகம் எடுபடாமல் போன படம்.
என் ராசிய ஊரெங்கிலும் கேட்டுப்பாரு – பங்காளி
இன்று இடம்பெறும் பாடல் ஒரு புகழ்பூத்த நாயகனின் திரைப்படம்.
ஹரிஹரன், ஜாலி முகர்ஜி மற்றும் படத்தின் நாயகன், குழுவினர் தேசிய ஒருமைப்பாட்டுக் கருத்தை வலியுறுத்திப் பாடும் அழகான பாடல் இது.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
ராமர் ஆனாலும் பாபர் ஆனாலும் – ஹே ராம்
குடும்ப நிறுவனமொன்றின் தயாரிப்பில் இளையவரே நடித்த படம்.
கங்கை அமரன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடுகிறார்கள்.
பாடலின் ஆரம்ப ஆங்கில வரிகளை ஆங்கிலத்தில் கூடப் பகிரலாம் விடையாக.
I want to tell you something – ஆனந்த்
இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல் வரிகளில் சாதனா சர்க்கம் குழுவினர் பாடும் பாடல்.
எத்தனை அழகிய பாட்டு இது.
பாட்டுச்சொல்லி பாடச்சொல்லி – அழகி