#RajaMusicQuiz 4 பார் மகளே

பாடகி ஸ்வர்ணலதா பாடும் இந்தப் பாடலின் இன்னொரு வடிவம் இளையராஜா குரலிலும் உண்டு.

சிவாஜிகணேசன், பிரபு ஆகியோர் இணைந்து நடித்த படங்களில் ஒன்று.

நாங்களும், நீங்களும் சேர்ந்தால் பதில் கிட்டும்.

பாரடி குயிலே – நாங்கள்

Posted in Uncategorized | 47 Comments

#RajaMusicQuiz 3 ஜெயச்சந்திரன் பிறந்த தினத்தில்

எஸ்.பி.சைலஜாவின் ஆலாபனையோடு அமையும் இந்தப் பாடலை அவரோடு ஜெயச்சந்திரன் அவர்களும் இணைந்து பாடியுள்ளார். கவிஞர் வாலியின் கவிவரிகள்.

நகைச்சுவை நடிகர் ஒருவருக்கு இந்தப் படத்தில் அட்டகாஷ் பாட்டெல்லாம் உண்டு. இந்தப் பாடல் கிடைத்தது நாயகனுக்கு. ஒரு நடிகையின் பெயர் படத் தலைப்பில் இருக்கும்.

பெத்தாலும் பெத்தேனடா – அன்பே சங்கீதா

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 2 குழலூதும் மங்கை

புலவர் புலமைப்பித்தன் வரிகளில் அணி செய்யும் பாடல் இன்றைய புதிரில்.

சித்ராவே ஆலாபனையோடு தொடங்கிப் பாடுகிறார்.

சித்திரையில் இப்படி காலநிலை இருந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லுது படப்பெயர்.

காற்றோடு குழலின் நாதமே – கோடை மழை

Posted in Uncategorized | 53 Comments

#RajaMusicQuiz 1 இனிதே ஆரம்பம்

இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு அமையும் அடுத்த புத்தம் புதுப் போட்டி இன்று முதல் இனிதே ஆரம்பம்.

இன்று வெள்ளோட்டமாக இடம்பெறும் பாடல் மிக இலகுவானதாக உங்கள் இதயத்துக்கு மிக நெருக்கமான எஸ்.ஜானகியின் ஆலாபனையோடு இடம்பெறுகிறது. இந்தப் பாடலைப் பாடியவர் இளையராஜா.

பாடலோடு வருக.

இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல் – இதயக் கோயில்

Posted in Uncategorized | 65 Comments

#RajaChorusQuiz 500 வெற்றியாளர்கள்

கடந்த ஜனவரி 2023 வரை 500 போட்டிகளாக நடத்தப்பட்ட ராஜா கூட்டுக்குரல் போட்டியில் 400 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களின் பட்டியல் இது.

Srinivasan (Qatar Seenu)
Balaji Sankara Saravanan V
Sivapriya Maharajan
ராஜா
Dinesh Dev
Saravanakumar
GV Rajen
Srividya M
பொ.காத்தவராயன்
Rajan VS
Nagaraj CN
Santhi
Shan Vijayakumar
Ganesan
Loganathan Arumugam
Muthiah R
Ammukutti
Maharajan
Balamurugan G
V Raja
Umesh Srinivasan
Chockkalingam C
Rani Ignatitus
Shafi
Murali S
P Babu


இவர்களுக்குக் காலக் கிரமத்தில் புத்தகப் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வொருவரும் திருத்தமாக எடுத்த புள்ளிகளை எடுப்பதில் மிகுந்த சவால் இருந்தது. இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று பின்வரும் சவால்கள் இருந்ததால் ஒவ்வொருவரின் சரியான புள்ளிகளைக் கொடுக்க முடியவில்லை.

1. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிகளில் இருந்து பதிலளித்தமை
2. ஐடி இல்லாமல் பதிலளித்தமை
3. ஒரே கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைக் கொடுத்தமை

வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி தொடங்க இருக்கும் #RajaSongQuiz இல் மேற்கண்ட சவால்களை நீங்கள் ஒவ்வொருவரும் தவிர்த்தால் ஒவ்வொரு நூறு சுற்றிலும் திருத்தமான புள்ளிகளோடு போட்டியாளரை அறிவிக்க உதவியாக இருக்கும்.

Posted in Uncategorized | 3 Comments