ராஜா கோரஸ் புதிர் போட்டி விதிமுறை

போட்டி குறித்த விளக்கம் இதோ
திரையிசையில் ஆயிரம் படங்களைத் தாண்டிச் சாதனை படைக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு இந்தப் போட்டி இடம்பெறவிருக்கின்றது.

ஒவ்வொரு போட்டியிலும் கோரஸ் பாடகர்களின் பகுதி வெளியாகும்.

அனைத்துப் பாடல்களும் தமிழில் வெளிவந்த, அல்லது தமிழில் மொழி மாற்றிய பாடல்களாகவே இருக்கும்.

உங்கள் பதிலை குறித்த கேள்வி கேட்கப்படும்http://rajaquiz.kanapraba.com/

தளத்தின் போட்டிப் பக்கத்தில் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு போட்டியிலும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் பாடல்களின் முதல் இரு சொற்களையும் தமிழில் தட்டச்சிப் பகிர வேண்டும்.

பாடலுக்கான பதிலைத் திருத்துபவருக்குப் புள்ளி இல்லை.

முதல்வராக அன்றித் தொடர்ந்து பதில் தருபவர்கள் பாடல்களின் முதல் இரண்டு சொற்களையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சிய தமிழ் வடிவிலோ தரலாம்.

புதிருக்கான பதிலை குறித்த போட்டி பகிர்ந்த பதிவின் comment box இல் மட்டும் இடவும்.

ட்விட்டரிலோ, பேஸ்புக்கிலோ, வாட்சாப்பிலோ பகிராதீர்.

இந்தப் போட்டி தினமும் இந்திய நேரம் மாலை 4 மணிக்கு இடம்பெறும். முதல் நாள் போட்டி முடிவு அடுத்த நாள் இந்திய நேரம் நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும்.

500 போட்டிகளாக அமையும் ராஜா இசைப் புதிர் ஒவ்வொரு 100 போட்டிகளும் தனிச் சுற்றுகளாகக் கணிக்கப்படும்.

Posted in Uncategorized | 2 Comments