கவியரசு கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல்.
ஶ்ரீதேவி நடித்த இந்தப் படத்தின் பாடலை கே.ஜே.ஜேசுதாஸுடன் ஆலாபனைக் குரலாக சசிரேகா. எல்.பி ரெக்கார்டில் இந்தப் பெண் குரலை எஸ்.பி.சைலஜா என்று பதிந்திருக்கிறார்கள்.
கூந்தலிலே மேகம் வந்து – பாலநாகம்மா
கவியரசு கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல்.
ஶ்ரீதேவி நடித்த இந்தப் படத்தின் பாடலை கே.ஜே.ஜேசுதாஸுடன் ஆலாபனைக் குரலாக சசிரேகா. எல்.பி ரெக்கார்டில் இந்தப் பெண் குரலை எஸ்.பி.சைலஜா என்று பதிந்திருக்கிறார்கள்.
கூந்தலிலே மேகம் வந்து – பாலநாகம்மா
ஆர்.வி.உதயகுமார் பாடல் வரிகளில் அமைந்த பாடல், ஆனால் அவர் இயக்காத படம் இது.
பிரபு ஒரு வேடத்தில் போலீஸ் ஆக நடித்த படம். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடும் பாடலிது.
கிண்ணாரம் கிண்ணாரம் கேட்குது கேட்குது – தர்மசீலன்
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் இன்றைய பாடல்.
மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா பாடியது.
இதைத் தேடி இலங்கைத் தீவு செல்ல வேண்டாம் தினத்தந்தி பாருங்கள்
கண்டேனே கண்டேனே காட்டில் – கன்னி தீவு
கவியரசு கண்ணதாசன் அவர்களின் வரிகளோடு அரங்கேறும் இன்றைய பாடல் T.M.செளந்தரராஜன் அவர்களின் பிறந்த நாள் நினைவில் எடுத்துவரப்படுகிறது.
நாயகனாக சிவாஜி கணேசன் நடித்த படமிது, மற்றவர்கள் இந்தப் பாடலுக்குச் சாட்சி சொல்லாமலேயே நீங்களே கண்டு பிடித்துப் பதிலோடு வாருங்கள்.
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு – தியாகம்
கங்கை அமரன் பாடல் வரிகளோடு அமைந்த பாடல் இன்று.
கவிதை மாதிரிப் படத் தலைப்பு இருக்கும் ஆனா… வேணாம் இதுக்கு மேல.
அருண்மொழி, சித்ரா பாடும் பாடலிது.
உன்னைக் காணமல் நான் ஏது- கவிதை பாடும் அலைகள்