நவராத்திரி நாட்களில் இரண்டாவது நாளாக அமையும் இன்றைய நாளில் சரஸ்வதி தேவியைப் போற்றிப் பாடும் பாடல் இது. கவிஞர் வாலியின் வரிகளில் பாம்பே ஜெயஶ்ரீ குழுவினர் பாடுகின்றார்கள்.
உயிர் மெய் எழுத்துகளில் ஒன்று இந்தப் பாடல் இடம்பெறும் படத்தின் தலைப்பின் ஆரம்ப எழுத்தாக அமைகின்றது.
படத்தின் பெயரை இடப்பெயர் என்ற வகுப்புக்குள்ளும் அடக்கலாம்.தலைப்பில் ஒரு பாதி ஒரு நாட்டின் பெயராக இருக்கின்றது.
பாடலோடு வருக
கை வீணையை ஏந்தும் கலைவாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே – வியட்நாம் காலனி