Monthly Archives: December 2021

#RajaChorusQuiz 141 பண்ணைப்புரப் பாட்டுக்காரன்

மனோ குழுவினருடன் சேர்ந்து பாடும் ஒரு கலக்கல் பாடல் இன்றைய புதிரில். பட்டிக்காடா பட்டணமா என்று பட்டிமன்றம் வைப்பது போல பிரபு & குஷ்பு தோற்றத்தில் வந்த படப் பாடல். கவிஞர் வாலி அவர்கள் இன்னொரு பாடலாசிரியரைப் புகழ்ந்து தொடங்கும் வரிகள். பாவலரு பாட்டு இது பண்ணைப்புரப் பாட்டு – உத்தமராசா

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 140 நெஞ்சத்தில் போராடும்

கங்கை அமரன் வரிகளில் எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள் இன்றைய புதிரில். நடிகை ரேவதிக்குக் கிட்டிய இன்னொரு அழகிய திருமணப் பாடல் இது. பூங்காற்றே தீண்டாதே – குங்குமச் சிமிழ்

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz முதற் சுற்று வெற்றியாளர்கள்

ராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் முதற் சுற்றில் 100 போட்டிகள் + 3 போன்ஸ் என்று அமைந்த போட்டிகளில் 50 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் விபரம். இவர்களில் 100 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை எடுத்த போட்டியாளர்களுக்குப் புத்தகப் பரிசு வெகு விரைவில் அனுப்பி வைக்கப்படும். Name Count Balamurugan 103 Muthiah R 103 Nagaraj 103 … Continue reading

Posted in Uncategorized | 13 Comments

#RajaChorusQuiz 139 இரு நெஞ்சம் கொண்டாடுது

மதுரை மரிக்கொழுந்து வாசம் போலவே வாசம் வீசியிருக்க வேண்டிய அதே கூட்டணிப் பாட்டு. மனோ, சித்ரா & குழுவினர் பாடும் இந்தப் பாடலை கங்கை அமரன் எழுதியதோடு, இயக்கிய படம். தாமிரபரணியில் தேடாதீர்கள். காவிரி ஆறு தானாக ஓடி – தெம்மாங்கு பாட்டுக்காரன்

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 138 நீதான் எனக்கு மச்சானா?

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி அவர்களே. இங்கே பகிரப்படும் பாடலைக் கூட்டுக் குரல்களோடு இன்னொரு கூட்டம் பாடகர்கள் பாடுகிறார்கள். அவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன், மற்றும் ஜென்ஸி ஆகியோர். இந்தப் படத்தில் இன்னொரு பாட்டு படத்தின் பேரை அழகாகச் சொல்லும். ஹேய் மஸ்தானா (சிறுசு சின்னஞ்சிறுசு) – அழகே உன்னை … Continue reading

Posted in Uncategorized | 42 Comments