Monthly Archives: September 2021

#RajaChorusQuiz 64 காதலுக்குத் தூது

இன்றைய பாடலை இயக்கு நர் ஆர்.வி.உதயகுமார் எழுதியிருக்கிறார், ஆனால் படத்தை அவர் இயக்கவில்லை. மனோ, சித்ரா குழுவினர் இணைந்து பாடும் ஒரு அட்டகாஷ் பாடலில் கோரஸ் குரல்களின் தொம் தொம். பிரபு நடித்த ஆனால் சின்னப் படம் அல்ல. முற்றத்து மாடப்புறா – பெரிய குடும்பம்

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 63 காதல் அழிவதில்லை

பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் இன்றைய கோரஸ் புதிர். இந்த அழகான காதல் பாடலை கூட்டுக் குரல்கள் சகிதம் இளையராஜாவும், ஜென்ஸியும் பாடுகிறார்கள். இருப்பதிலேயே இலகுவான பாட்டுக்கெல்லாம் ஓயாமல் க்ளூ கேட்டால் என்ன செய்வது? காதல் ஓவியம் பாடும் காவியம் – அலைகள் ஓய்வதில்லை.

Posted in Uncategorized | 48 Comments

#RajaChorusQuiz 62 பாடகி ஸ்வர்ணலதா நினைவு நாளில்

இன்று பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு நாளில் அவரின் பாடலில் கோரஸ் குரல்களைத் தாங்கிய ஒரு பாட்டு. ஒரு நிமிடம் 26 விநாடிகள் ஓடும் இந்தக் கூட்டுக் குரல்களின் சோக ஒலி அந்த அற்புதமான பாடகியின் இன்மையைக் காலம் தாண்டி உணர்த்தும் வலியாகப் பிறக்கும். புதிய பறவை பறந்ததே – தென்றல் வரும் தெரு

Posted in Uncategorized | 35 Comments

#RajaChorusQuiz 61 மானே தேனே

ஒரு அழகான காதல் பாட்டில் ஆமோதிப்பாய் கூட்டுக் குரல்கள். எஸ்.ஜானகி & மனோ பாடுகிறார்கள். என் இனிய தமிழ் மக்களே குருவி மாதிரிச் சேகரித்துக் கொண்டு வந்திருக்கிறேன் பாடலோடு டான்னு வாருங்கள். சிட்டான் சிட்டான் குருவி – புது நெல்லு புது நாத்து

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 60 என்ன பாட்டு பாட

இன்றைய பாடல் மனோ, குழுவினருடன் பாடும் ஒரு கோஷ்டி கானம். இந்தப் படத்தில் மற்ற எல்லாப்பாடல்களும் போட்டி போட்டிக் கொண்டு ஹிட்டடித்தவை. அதனாலோ என்னவோ மற்றைய பாடல்கள் அளவுக்கு அறியப்ப்படாத பாடல். ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் போது பாடலின் மெட்டமைத்த விதமும் கோரஸ் குரல்களைச் சிறப்பாகக் கையாண்ட வகையிலும் நேசிக்க வைக்கும். கவிஞர் வாலி … Continue reading

Posted in Uncategorized | 39 Comments