Monthly Archives: August 2021

#RajaChorusQuiz 37 ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

மனோ & சித்ரா ஜோடிக் குரல்களோடு அணி செய்யும் கோரஸ் கூட்டணி பாட்டின் துள்ளிசைக்கேற்ப ஆர்ப்பரிக்கிறார்கள். கங்கை அமரன் இயக்கிய படத்தில் அவரே இப்பாடலையும் எழுதியிருக்கின்றார். எம்.ஜி.ஆர் வெறியர் நடித்ததால் பழைய பாடலொன்றின் காட்சியமைப்பினை நினைவுபடுத்துமாற் போல அமையும் பாட்டு. மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே – பொண்ணுக்கேத்த புருஷன்

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 36 ஆட்டம் போடு ஓட்டத்திலே

இன்று அதிரடி துள்ளிசையில் ஒரு பாட்டு. தொண்ணூறுகளில் துள்ளிசைப் பாடகியாக அறிமுகமான வால்பாறைப் பாடகியோடுகோரஸ் குரல்களும் அதகளம் பண்ணும் பாட்டு இது. இங்கே பகிர்ந்த பாடல் இசையில் பாடகி பாடும் பகுதியை நீக்கி,கோரஸ்குரல்களை மட்டும் கொடுத்திருக்கிறேன். ஏதாவது நல்ல காரியம் நடந்தால் படத்தின் தலைப்பில் இருக்குமாற்போல நாலு பேர் விசாரிப்பாங்க. இந்த பஸ்ஸு தான் PTC … Continue reading

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 35 பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நினைவில்

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ஐந்தாண்டு நினைவில் அவரும் இசைஞானி இளையராஜாவும் இணைந்த ஒரு பாடல். அம்மன் கோயில் கொண்டாட்டக் களத்திலே கூட்டுக்குரல்கள் குலவை ஓசைக்கு வந்தமைகின்றார்கள். அம்மன் பாட்டுக்கே உரிய துள்ளலும், இடையே மெது நடையுமாகப் பயணிக்கும். T.S.ராகவேந்தர், சண்முகசுந்தரி, பெரிய கருப்பத்தேவர் என்ற மூத்த பாடகர்களோடு பவதாரணியும் சேர்ந்த பாட்டு இது. இரண்டு நாயகர்கள் … Continue reading

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 34 மன்மதராசா மன்மதராசா

எஸ்.பி.பாலசுப்ரமணியம் தோழியருடன் பாடும் கோரஸ் பாட்டு இன்று. ஒரு மன்மத நாயகனுக்கு காதல் ரசப் பாட்டு அதிலும் அந்த எஸ்பிபி குரலில் பழம் பெரும் பாடகராக மிளிர்ந்திருப்பார். பதிலோடு வராவிட்டால் குற்றம் குற்றமே. தீராத விளையாட்டுப் பிள்ளை – நெற்றிக்கண்

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 33 பாடகி மின்மினி பிறந்த நாளில்

இன்று பின்னணிப் பாடகி மின்மினி பிறந்த நாளில் அவர் பாடிய சிறப்புப் பாடலோடு ஒரு புதிர். இணைந்து பாடுபவர் மனோ மற்றும் குழுவினர். புலவர் புலமைப்பித்தன் வரிகளில் வரும் இந்தப் பாட்டு ஒரு உறவு முறையைத் தலைப்பில் கொண்ட படத்தில் இருந்து.  மலையோரம் மாங்குருவி மாவிலையில் – எங்க தம்பி

Posted in Uncategorized | 52 Comments