Monthly Archives: August 2021

#RajaChorusQuiz 42 ஓணம் கொண்டாடி

நிறைந்த திருவோணத்தின் கொண்டாட்டப் பாடலாக இன்றைய போட்டிப் பாட்டு. இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பாடுபவர் சுஜாதா. கூட்டுக் குரல்களின் எடுப்பு அப்படியே கேரளத்துக்கு அழைத்துச் சென்று கொண்டாட வைக்கும். பொன்னின் திருவோணத் திருநாளும் வந்தல்லோ – கவலைப்படாதே சகோதரா

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 41 ஒன்று கலந்த அன்பு மனங்கள்

இன்று இடம்பெறும் தெம்மாங்குப் பாடலின் சிறப்பு என்னவென்றால் ஒரு பக்கம் மேளமும், நாயனமுமாகவும் இன்னொரு பக்கம் அமைதியான மெல்லிசையுமாகக் கலந்த அழகான காதல் ஜோடிப் பாட்டு இது. கங்கை அமரன் பாடல் வரிகள் ஆனால் இயக்கியது இன்னொருவர். பி.சுசீலா, மனோ கூட்டணியில் இடம்பெறும் இந்தப் பாடல் எல்லாம் தெரியாவிட்டால் ஊருப் பக்கம் விசாரித்துப் பாருங்கள். மாலை … Continue reading

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 40 சிறகு முளைத்தது

பாடலாசிரியர் மு.மேத்தா அவர்களின் பாடலோடு இன்றைய கூட்டுக் குரல் போட்டி. ரஜினிகாந்த் நடித்த ஒரு பிரபல படத்தில் வரும் பாடலின் ஆரம்ப அடிகளைத் தலைப்பாகக் கொண்ட படத்தின் பாடல். கலக்கலான துள்ளிசைப்பாடல், பாடகி சுஜாதாவோடு பாடும் ஆண் குரல் தொண்ணூறுகளில் தொடங்கி துள்ளிசைக் குரலாகத் தமிழ்த் திரையிசையில் கலக்கியவர். சிட்டு பறக்குது- நிலவே முகம் காட்டு

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 39 பூவுக்குள் பூகம்பம்

அநீதிக்கு எதிரான ஒரு பாடலோடு இன்றைய  கோரஸ் புதிர். கிரீடம் போல ஒரு தலைப்பு, புரட்சித் தமிழனைப் புரட்டி எடுத்த படம். ஆனால் அட்டகாசமான பாடல்கள் நிறைந்தது. இந்தப் பாடல் அதிகம் பரவலான அறிமுகமில்லாத சிறப்பான பாடல்.குடம் குடமா க்ளூ இருக்கேப்பா. வங்கக்கடல் பொங்கி எழ வந்ததொரு பூகம்பம் – மகுடம்

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 38 தாகம் கொண்ட கங்கை

இந்தப் பாட்டின் சிறப்பைச் சொல்ல வேண்டுமென்றால் கோரஸ் குரல்களுக்கு ஒரு கொண்டாட்டமே நடத்தியது போல இருக்கும். பாடலின் முகப்பில் பி.சுசீலா அவர்களின் ஆலாபனையைத் தொடர்ந்து வரும் அந்த மங்கையரின் குரலோசை, இரண்டு சரணத்துக்கு முந்திய பகுதியிலும், பாடல் முடிவிலுமாகத் தொடர்கிறார்கள். இந்தப் பாடலில் கொடுத்திருக்கும் வாத்தியக் கூட்டே போதும் ஆனாலும் கோரஸ் குரல்களை வைத்து ஒரு … Continue reading

Posted in Uncategorized | 43 Comments