Monthly Archives: August 2021

#RajaChorusQuiz 47 விஜயகாந்த் வாரம் – வைதேகி காத்திருந்தாள்

எஸ்.ஜானகி குழுவினர் பாடும் கூட்டுப் பாடலாக இன்றைய பாட்டு. ஆண் குரல்களும், பெண் குரல்களுமாகச் சங்கமிக்கும் இந்தப் பாடலில் இது போதாதென்று அருண்மொழியின் சிறு ஆலாபனை வேறு. ஆக மொத்தத்தில் ஆர்ப்பரிக்கும் பிரமாண்ட இசையில் நாயகிக்குத் தான் எத்தனை ஆதரவுக்குரல்கள். ஏழை, பணக்கார ஜாதி இல்லாது எல்லார்க்கும் பொழியும் இசை. அதோ அந்த நதியோரம் – … Continue reading

Posted in Uncategorized | 48 Comments

#RajaChorusQuiz 46 புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த நாளில்

இன்றைய பாடல் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் பிறந்த நாள் சிறப்புப் பாடலாக. மனோ & குழுவினர் பாடுகிறார்கள். கோரஸ் குழுவே பாடலை அடியெடுத்துக் கொடுக்கும் பாவனையில் ஒரு தன்னம்பிக்கை தரும் பாட்டு. வரிகள் கவிஞர் வாலி. போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு – பரதன்

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 45 விஜயகாந்த் வாரம் – வேங்கையின் மைந்தன்

இன்று இடம்பெறும் பாடல் எஸ்.ஜானகி குழுவினருடன் இணைந்து பாடும் எண்பதுகளின் கானம். விஜய்காந்த் இன் ஆரம்பகாலப் படமாக அமைந்த இந்தப் படத்தின் தலைப்பு ஒரு ஆயுதத்தைக் குறிக்கும். அதிகம் கேட்டிருக்கமாட்டீர்கள் இந்தப் பாட்டை ஆனால் இப்போது கேட்டால் இந்தப் பாடலின் புதுமையான இசையமைப்பு உங்களை ரசிக்க வைக்கும். காட்டுக்குள்ளே கருகமணி – ஈட்டி

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 44 விஜயகாந்த் வாரம் – பூமழை பொழியுது

இந்த வாரம் அடுத்த ஏழு நாட்களும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் திரைப்படப் பாடல்களின் கோரஸ் மழை அடிக்கவிருக்கின்றது. இன்றைய பாடலை மனோ & சித்ரா பாடுகிறார்கள். கங்கை அமரன் வரிகள். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இளமைத் துடிப்போடு துள்ளாட்டம் கொடுக்கும் பாட்டு இது. பாராமல் பார்த்த நெஞ்சம் – பூந்தோட்டக் காவல்காரன்

Posted in Uncategorized | 54 Comments

#RajaChorusQuiz 43 என்னுயிர்த் தோழி கேளடி சேதி

தோழியரோடு நாயகி தன் காதலை ஒப்புவிக்கும் சீரான மதுரைப்பாட்டு. தோழியர் கூட்டமும் ஆமாப் போட்டுத் தூண்டி விடுகின்றது. கங்கை அமரன் வரிகளில் சித்ரா பாடுகின்றார். இந்தப் படம் கங்கை அமரன் இயக்காத ராமராஜன் படம். தென்மதுரை சீமையிலே மீனாட்சி கோவிலிலே – தங்கமான ராசா

Posted in Uncategorized | 39 Comments