Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 45 விஜயகாந்த் வாரம் – வேங்கையின் மைந்தன்

இன்று இடம்பெறும் பாடல் எஸ்.ஜானகி குழுவினருடன் இணைந்து பாடும் எண்பதுகளின் கானம். விஜய்காந்த் இன் ஆரம்பகாலப் படமாக அமைந்த இந்தப் படத்தின் தலைப்பு ஒரு ஆயுதத்தைக் குறிக்கும். அதிகம் கேட்டிருக்கமாட்டீர்கள் இந்தப் பாட்டை ஆனால் இப்போது கேட்டால் இந்தப் பாடலின் புதுமையான இசையமைப்பு உங்களை ரசிக்க வைக்கும். காட்டுக்குள்ளே கருகமணி – ஈட்டி

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 44 விஜயகாந்த் வாரம் – பூமழை பொழியுது

இந்த வாரம் அடுத்த ஏழு நாட்களும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் திரைப்படப் பாடல்களின் கோரஸ் மழை அடிக்கவிருக்கின்றது. இன்றைய பாடலை மனோ & சித்ரா பாடுகிறார்கள். கங்கை அமரன் வரிகள். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இளமைத் துடிப்போடு துள்ளாட்டம் கொடுக்கும் பாட்டு இது. பாராமல் பார்த்த நெஞ்சம் – பூந்தோட்டக் காவல்காரன்

Posted in Uncategorized | 54 Comments

#RajaChorusQuiz 43 என்னுயிர்த் தோழி கேளடி சேதி

தோழியரோடு நாயகி தன் காதலை ஒப்புவிக்கும் சீரான மதுரைப்பாட்டு. தோழியர் கூட்டமும் ஆமாப் போட்டுத் தூண்டி விடுகின்றது. கங்கை அமரன் வரிகளில் சித்ரா பாடுகின்றார். இந்தப் படம் கங்கை அமரன் இயக்காத ராமராஜன் படம். தென்மதுரை சீமையிலே மீனாட்சி கோவிலிலே – தங்கமான ராசா

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 42 ஓணம் கொண்டாடி

நிறைந்த திருவோணத்தின் கொண்டாட்டப் பாடலாக இன்றைய போட்டிப் பாட்டு. இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பாடுபவர் சுஜாதா. கூட்டுக் குரல்களின் எடுப்பு அப்படியே கேரளத்துக்கு அழைத்துச் சென்று கொண்டாட வைக்கும். பொன்னின் திருவோணத் திருநாளும் வந்தல்லோ – கவலைப்படாதே சகோதரா

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 41 ஒன்று கலந்த அன்பு மனங்கள்

இன்று இடம்பெறும் தெம்மாங்குப் பாடலின் சிறப்பு என்னவென்றால் ஒரு பக்கம் மேளமும், நாயனமுமாகவும் இன்னொரு பக்கம் அமைதியான மெல்லிசையுமாகக் கலந்த அழகான காதல் ஜோடிப் பாட்டு இது. கங்கை அமரன் பாடல் வரிகள் ஆனால் இயக்கியது இன்னொருவர். பி.சுசீலா, மனோ கூட்டணியில் இடம்பெறும் இந்தப் பாடல் எல்லாம் தெரியாவிட்டால் ஊருப் பக்கம் விசாரித்துப் பாருங்கள். மாலை … Continue reading

Posted in Uncategorized | 42 Comments