Author Archives: kanapraba

#RajaChorusQuiz 5 பாடலாசிரியர் பழநிபாரதி பிறந்த நாளில்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அன்பின் பாடலாசிரியர் பழநிபாரதி அவர்களை ராஜா கோரஸ் புதிர் வழி வாழ்த்திக் கொண்டு அவரின் பாடலொன்றே போட்டியை அணி செய்கிறது. பாடலை ஸ்வர்ணலதா குழுவினர் பாடுகின்றார்கள். இந்தப் படம் நாயகனுக்குத் திருப்புமுனையாகவும், அறிமுக இயக்குநருக்கு அடையாளத்தையும் நிறுவியது. படத்தின் தலைப்புப் போலவே இயக்குநரும் இரண்டெழுத்து. காதலென்ன காதலென்ன கத்திரிக்காயா – … Continue reading

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 4 ஆதிகாலத்துக் காதலராக

காதல் ஜோடிப் பாடலாக இன்றைய பாடலில் எஸ்.ஜானகி & அருண்மொழி பாடிய பாட்டு. பிறைசூடன் வரிகளில் ஆதி காலத்துக்கு அழைத்துப் போகும் கோரஸ் குரல்களோடு இந்த ஜோடி. ஆதாமும் ஏவாளும் போல – மருதுபாண்டி

Posted in Uncategorized | 49 Comments

#RajaChorusQuiz 3 மண் பார்க்கும் பெண் பார்க்க

இங்கே கூட்டுக் குரல்கள் காதலர்களின் சந்தோஷக் கூட்டில் சந்தம் இசைக்கிறார்கள். ஜெயச்சந்திரன் & சுனந்தா ஜோடிக் குரல்கள் ஒலிக்கும் படம் இது. வைரமுத்து வரிகளில் மயக்கும் காதல் பாட்டு. காதல் மயக்கம் அழகிய கண்கள் – புதுமைப் பெண்

Posted in Uncategorized | 63 Comments

#RajaChorusQuiz 2 ராச (ஜ) லீலை

இன்றைய கூட்டுச் சேர் குரல்களின் நாதம் ஒரு தெய்வீக ஒலியாக எழும். இந்தப் பாடலின் அழகுணர்ச்சிக்க்குப் பூக்களைத் தூவுமாற் போல. கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் இந்தப் பாடலைக் கேட்டாலும் அந்தத் தெய்வீக உணர்வையே அள்ளித் தரும். ஆனால் வரிகளை ஆழ்ந்து கவனித்தால் அதில் காமசூத்திரத்தின் கவி உரையாகப் புனையப்பட்டிருக்கும். புலவர் புலமைப்பித்தனைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததற்கு நியாயம் விளைவித்திருக்கிறார். … Continue reading

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 1 கூட்டுக் குரல்கள் காதல் ஒலியோடு முதல் வரவு

ராஜா கோரஸ் புதிர்ப் போட்டியினை ஏழு வருடங்களின் பின்னர் மீண்டும் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த கோரஸ் போட்டி 500 பாடல்கள் சக போனஸ் பாடல்களைக் கொடுத்திருந்தேன். இருந்தும் விடுபட்டவை இன்னும் இன்னும் ஏராளம். எனவே இந்தச் சுற்றில் எல்லாமும் பதிவாக்கும் முனைப்போடு தொடங்குகின்றேன். இன்றைய பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரபலமான பாடல் ஒன்று, … Continue reading

Posted in Uncategorized | 74 Comments