Author Archives: kanapraba

#RajaChorusQuiz 165 தைப்பொங்கலும் வந்தது

அனைத்து ராஜா கோரஸ் புதிர் சொந்தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் தின வாழ்த்துகள். இன்றைய போட்டி ஒரு கலக்கலான கிராமியத் துள்ளலோடு வருகின்றது. காதலும், கொண்டாட்டமுமாகக் கூட்டுக் குரல்களோடு வரும் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர். பாடலோடு வருக. சந்தைக்கு வந்த கிளி – தர்மதுரை

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 164 தெம்மாங்குப் பாட்டுக்காரன்

இன்றைய புதிர்ப் பாடலில் குறிப்பிடப்படும் சரியான ஆரம்ப வரிகளோடு வரவும். இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன் அவர்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன் & குழுவினர் பாடும் பாடல். கார்த்திக் உடன் இன்னொரு வாரிசு நடிகை நடித்த படம். சேர நாடு, சோழ நாடு எல்லாம் தேடாமல் சரியான நாட்டில் தேடினால் படம் … Continue reading

Posted in Uncategorized | 52 Comments

#RajaChorusQuiz 163 பாட்டுக் கட்டணும்

மலேசியா வாசுதேவன் குழுவினரின் ரகளையான பாட்டு இன்றைய புதிரில். பாடல் வரிகள் மு.மேத்தா. இந்தப் படத்துக்கெல்லாம் க்ளூ வேண்டுமா என்றால் சமீப வருடமொன்றில் இளம் நாயகன் இதே படத் தலைப்பில் நடித்திருந்தார். மாமனுக்கு மைலாப்பூரு தான் – வேலைக்காரன்

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 162 பூத்துப் பூத்துக் குலுங்குதடி பூவு

எஸ்.ஜானகி, மனோ & குழுவினர் பாடும் இனிய காதல் பாடல் இன்றைய புதிராக. நடிகர் முரளி நாயகனாக நடித்த படம். பாடல் வரிகள் கங்கை அமரன். பூத்தது பூந்தோப்பு பார்த்து – தங்க மனசுக்காரன்

Posted in Uncategorized | 46 Comments

#RajaChorusQuiz 161 கானகந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் பிறந்த நாளில்

கானகந்தர்வன் பிறந்த நாள் திரையிசையாக மலர்கின்றது இன்றைய கோரஸ் புதிர். கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் தாயுமானவராகத் தோன்றிய பாடல்களில் இந்தப் பாடல் தனித்துவமானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இற்குக் குரல் கொடுத்தவர் அவராகவே பாடும் குழந்தைப் பாட்டு. கோரஸ் குரல்களோடு பாய்ந்தொலிக்கும் கானகந்தர்வனின் அந்தக் கனிவான குரல் நெகிழ வைக்கும். கூட்டுக்குரல்கள் ஓயும் வேளை துள்ளிக் கொள்ளும் … Continue reading

Posted in Uncategorized | 49 Comments