Author Archives: kanapraba

RajaMusicQuiz 17 கவிஞர் முத்துலிங்கம் பிறந்த நாளில்

கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கு கவிஞர் வாலி பாணியில் ஒரு பாட்டு எழுதக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியே இசையெனும் இன்ப வெள்ளம் கலக்க, தன் பக்திப் பெரு வரிகளால் ஆன்மிக உலகுக்குள் எம்மை இருத்துகிறார் இந்தப் பாடலில். பாடலைக் கண்டு பிடிப்பது மட்டுமல்ல இங்கே இரண்டு ஆலாபனைத் துணுக்குகளை இணைத்துக் கொடுத்திருக்கிறேன் கேட்டுப் பாருங்கள் மெய் … Continue reading

Posted in Uncategorized | 55 Comments

#RajaMusicQuiz 16 ஊரெங்கும் தெரிஞ்சவ

சித்ரா, மனோ பாடும் இன்றைய போட்டிப் பாடல். ஒரு பெண் பாத்திரத்தின் பெயரே படத் தலைப்பு. ஹிந்தியில் வெற்றிபெற்ற படம் தமிழில் கிடைக்காது போனது. ரேவதி முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ஜில்லா முழுக்க நல்லாத் தெரியும் – பிரியங்கா

Posted in Uncategorized | 56 Comments

#RajaMusicQuiz 15 ஆனந்தத் தேன்காற்று

கங்கை அமரன் வரிகளில் மலேசியா வாசுதேவன் தனித்துப் பாடிய பாடலிது. சி.எஸ்.ஜெயராமன் போல இவர் பாடிய பாடல்களில் இன்னொன்று இது. படத்தின் காட்சியை யூடியூபில் தேடாதீர்கள் கடல்லையே இல்லையாம். படத் தலைப்பை நீங்கள் தேட நீங்கள் கிராமத்தில் இருந்து இங்கு வர வேண்டும். வாழ்வினில்/வால்வினில் உன் நினைவால் – பட்டணம் போகலாம் வா

Posted in Uncategorized | 32 Comments

#RajaMusicQuiz 14 திருமுகம் தேடி

அருண்மொழியின் ஆலாபனையோடு கூடிய மூன்று பாகங்களை இணைத்து இங்கே தருகிறேன். பாடல் கூட மிகச் சிறியது தான். இளையராஜாவின் பாடல் வரிகளோடு அமைந்த இந்தப் பாடல் காட்சிப்படுத்தப்பட்ட கொடுப்பினை இரண்டு பெண் பெயர்கள் கொண்ட தலைப்பில் அமைந்த படத்துக்குத்தான் வாய்த்தது. திருமகள் உன் முகம் காண வேண்டும் – வனஜா கிரிஜா

Posted in Uncategorized | 45 Comments

RajaMusicQuiz 13 தேன் பூவே வா

பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் சுசீலா அவர்களின் இனிமை சொட்டும் பாடலொன்று. என்னப்பா ஒரே அவர்களாக இருக்கா ஹும் ஜெய்சங்கர் அவர்கள் நடித்த படமிது. தேனில் ஆடும் ரோஜா – அவர் எனக்கே சொந்தம்

Posted in Uncategorized | 49 Comments