Monthly Archives: June 2023

#RajaMusicQuiz 94 மலேசியா வாசுதேவன் கொண்டாட்டம்

மலேசியா வாசுதேவன் அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டப் பாடலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகக் கொடுத்த கலக்கலான பாட்டு இன்றைய போட்டியில். பாடல் வரிகள் கவிஞர் வாலி. தொகையறாவை சுனந்தா பாடியிருப்பார். நீலவிழி ஓரம் நிலவே காயும் / ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி – தர்மத்தின் தலைவன்

Posted in Uncategorized | 48 Comments

#RajaMusicQuiz 93 ஓடு ராஜா

எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனித்து ஆனால் யானையோடு சேர்ந்து ஆடிப் பாடும் பாட்டு :0 பாடல் வரிகள் வாலி. இதுக்கு மேல் என்ன க்ளூ வேண்டும் ராமா? நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் – ராம் லட்சுமண்

Posted in Uncategorized | 42 Comments

#RajaMusicQuiz 92 பாடலாசிரியர் வாசன் பிறந்த நாளில்

தான் ஈன்ற பாடல்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடலாசிரியர் வாசனின் பிறந்த நாள் சிறப்புப் பாடல் இன்றைய போட்டியில். பாடலைப் பாடுபவர் இளையராஜா. தொண்ணூறுகளில் வெளிவந்த இந்தப் படத்தின் தலைப்பில் தமிழகத்தின் ஒரு ஊர்ப் பெயர் ஒட்டியிருக்கும். காபி குடித்துக் கொண்டே பதிலோடு வருக. ஒரு நந்தவனக்குயில் சொன்னது தாலாட்டு – கும்பகோணம் கோபாலு

Posted in Uncategorized | 42 Comments

#RajaMusicQuiz 91 வீசும் காற்றுக்கு

நடிகர் கார்த்திக்குக்காக இளையராஜா பாடியளித்த பாட்டு. பாடல் வரிகளையும் இளையராஜாவே எழுதி, கோஷ்டியோடு பாடுகிறார். நேராகச் சிந்திக்காவிட்டால் படத் தலைப்பு வீசும். சாமியாரா போனவனுக்கு – எதிர்காற்று

Posted in Uncategorized | 41 Comments

#RajaMusicQuiz 90 பேட்டையில் வேட்டை

மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். பாடல் வரிகள் கங்கை அமரன். சிவாஜியும், சிவாஜியும் நடித்த படம். நாகூரு பக்கத்துல நம்மளோட பேட்ட – வெள்ளை ரோஜா

Posted in Uncategorized | 37 Comments