Monthly Archives: June 2023

#RajaMusicQuiz 99 பாவையோடு பாட்டு

நா.காமராசன் அவர்களின் வரிகளோடு இன்றைய பாடல். கமல்ஹாசன் நடித்த இந்தப் படத்தை இயக்கியவரும் இன்னொரு நடிகர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா பாடுகிறார்கள். எத்தனை நிமிஷம் வேணும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள், பதிலோடு வருக. தேவை இந்த பாவை தானே தெய்வலோகம் – அந்த ஒரு நிமிடம்

Posted in Uncategorized | 48 Comments

#RajaMusicQuiz 98 என்றென்றும் ஆனந்தமே

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாட்டு. படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கும் பாடல். எஸ்.ஜானகி & மலேசியா வாசுதேவன் பாடுகிறார்கள். உனக்கும் எனக்கும் ஆனந்தம் – ஶ்ரீ ராகவேந்திரர்

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 97 மகிழம் பூவே வா

எஸ்.ஜானகியோடு இளையராஜா பாடும் பாடல் இன்றைய போட்டியில். பாடல் வரிகள் கவிஞர் வாலி. ஒரு தயாரிப்பாளரே ராசாவை நம்பி நாயகனாக நடித்த படங்களில் ஒன்று. ஒரு சந்தனக் காட்டுக்குள்ளேமுழுச் சந்திரன் காயயிலே – எல்லாமே என் ராசாதான்

Posted in Uncategorized | 45 Comments

#RajaMusicQuiz 96 வழி நெடுக காட்டுமல்லி

எஸ்.ஜானகியோடு இளையராஜா பாடும் பாடல் இன்றைய போட்டியில். ஜானகி போடும் அந்தக் குரல் ஜாலத்திலேயே பாடலைக் கண்டு பிடித்திருப்பீர்கள். கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள். சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல – மலையூர் மம்பட்டியான்

Posted in Uncategorized | 55 Comments

#RajaMusicQuiz 95 பாடகர் கிருஷ்ணசந்தர் ஸ்பெஷல்

இன்று பிறந்த நாள் காணும் கிருஷ்ணசந்தர் அவர்களுக்கான அணிகலனாக அமையும் பாட்டு. இந்தச் சிறு துணுக்கை வைத்தே பிடித்து விடுவீர்களே? இணைந்து பாடிய பெண் குரல் எஸ்.ஜானகி. இசைஞானி இளையராஜாவின் குரலோடு தொடங்கும் பாட்டு. (ஊரெங்கும் மழையாச்சு) பூவாடைக்காற்று வந்து – கோபுரங்கள் சாய்வதில்லை

Posted in Uncategorized | 52 Comments