Monthly Archives: March 2023

#RajaMusicQuiz 5 லைலா மஜ்னு காதலா

இன்றைய பாடல் சிதம்பரநாதன் அவர்களின் வரிகளுக்கு கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் பாடல். கார்த்திக் நடித்த திரைப்படங்களில் ஒன்று. இந்தப் படத்தில் இன்னொரு பாட்டு அதிரிபுதிர் ஹிட் ஆச்சே. முத்தம் கட்டி முத்தம் – தர்மபத்தினி

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 4 பார் மகளே

பாடகி ஸ்வர்ணலதா பாடும் இந்தப் பாடலின் இன்னொரு வடிவம் இளையராஜா குரலிலும் உண்டு. சிவாஜிகணேசன், பிரபு ஆகியோர் இணைந்து நடித்த படங்களில் ஒன்று. நாங்களும், நீங்களும் சேர்ந்தால் பதில் கிட்டும். பாரடி குயிலே – நாங்கள்

Posted in Uncategorized | 47 Comments

#RajaMusicQuiz 3 ஜெயச்சந்திரன் பிறந்த தினத்தில்

எஸ்.பி.சைலஜாவின் ஆலாபனையோடு அமையும் இந்தப் பாடலை அவரோடு ஜெயச்சந்திரன் அவர்களும் இணைந்து பாடியுள்ளார். கவிஞர் வாலியின் கவிவரிகள். நகைச்சுவை நடிகர் ஒருவருக்கு இந்தப் படத்தில் அட்டகாஷ் பாட்டெல்லாம் உண்டு. இந்தப் பாடல் கிடைத்தது நாயகனுக்கு. ஒரு நடிகையின் பெயர் படத் தலைப்பில் இருக்கும். பெத்தாலும் பெத்தேனடா – அன்பே சங்கீதா

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 2 குழலூதும் மங்கை

புலவர் புலமைப்பித்தன் வரிகளில் அணி செய்யும் பாடல் இன்றைய புதிரில். சித்ராவே ஆலாபனையோடு தொடங்கிப் பாடுகிறார். சித்திரையில் இப்படி காலநிலை இருந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லுது படப்பெயர். காற்றோடு குழலின் நாதமே – கோடை மழை

Posted in Uncategorized | 53 Comments

#RajaMusicQuiz 1 இனிதே ஆரம்பம்

இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு அமையும் அடுத்த புத்தம் புதுப் போட்டி இன்று முதல் இனிதே ஆரம்பம். இன்று வெள்ளோட்டமாக இடம்பெறும் பாடல் மிக இலகுவானதாக உங்கள் இதயத்துக்கு மிக நெருக்கமான எஸ்.ஜானகியின் ஆலாபனையோடு இடம்பெறுகிறது. இந்தப் பாடலைப் பாடியவர் இளையராஜா. பாடலோடு வருக. இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல் – இதயக் … Continue reading

Posted in Uncategorized | 65 Comments