Monthly Archives: March 2023

#RajaMusicQuiz 23 பிள்ளை எனும் வீணை

ஆர்.வி.உதயகுமார் பாடல் வரிகளில் அமைந்த பாடல், ஆனால் அவர் இயக்காத படம் இது. பிரபு ஒரு வேடத்தில் போலீஸ் ஆக நடித்த படம். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடும் பாடலிது. கிண்ணாரம் கிண்ணாரம் கேட்குது கேட்குது – தர்மசீலன்

Posted in Uncategorized | 40 Comments

#RajaMusicQuiz 22 கட்டழகுக் கண்ணா

பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் இன்றைய பாடல். மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா பாடியது. இதைத் தேடி இலங்கைத் தீவு செல்ல வேண்டாம் தினத்தந்தி பாருங்கள் கண்டேனே கண்டேனே காட்டில் – கன்னி தீவு

Posted in Uncategorized | 46 Comments

#RajaMusicQuiz 21 TMS பிறந்த தின நினைவில்

கவியரசு கண்ணதாசன் அவர்களின் வரிகளோடு அரங்கேறும் இன்றைய பாடல் T.M.செளந்தரராஜன் அவர்களின் பிறந்த நாள் நினைவில் எடுத்துவரப்படுகிறது. நாயகனாக சிவாஜி கணேசன் நடித்த படமிது, மற்றவர்கள் இந்தப் பாடலுக்குச் சாட்சி சொல்லாமலேயே நீங்களே கண்டு பிடித்துப் பதிலோடு வாருங்கள். நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு – தியாகம்

Posted in Uncategorized | 57 Comments

#RajaMusicQuiz 20 காணும் நேரம்

கங்கை அமரன் பாடல் வரிகளோடு அமைந்த பாடல் இன்று. கவிதை மாதிரிப் படத் தலைப்பு இருக்கும் ஆனா… வேணாம் இதுக்கு மேல. அருண்மொழி, சித்ரா பாடும் பாடலிது. உன்னைக் காணமல் நான் ஏது- கவிதை பாடும் அலைகள்

Posted in Uncategorized | 57 Comments

RajaMusicQuiz 19 உகாதி ஸ்பெஷல்

இன்றைய ஸ்பெஷல் பாடலாகத் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றிய படப் பாடல் ஒன்று வருகிறது. ஆகவே பாடல் வரிகளை நீங்கள் தமிழில் தான் கொடுக்க வேண்டும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனி ஆளாக நின்று நிகழ்த்திய அசுர சாதகத்தின் பிரதிபலிப்புகளில் ஒன்று இது. அது தான் ஒரு நிமிடத்துக்குச் சற்றுக் குறைவான இந்த நீண்ட ஆலாபனை … Continue reading

Posted in Uncategorized | 42 Comments